வகுப்பறையில் மாணவனை திருமணம் செய்த பேராசிரியை – அவங்க சொன்ன காரணம் தான் ஹைலைட்

“மேற்கு வங்க மாநிலத்தில் கல்லூரி பேராசிரியை ஒருவர் முதலாம் ஆண்டு மாணவனை வகுப்பறையில் வைத்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது பேசு பொருளாகியுள்ளது. மௌலானா அபுல் கலாம் ஆசாத் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் தான் இந்த சம்பவம் அரங்கேறியது.

இது தொடர்பான வீடியோவில் வகுப்பறைக்குள் பேசாரியை மற்றும் மாணவன் என இருவரும் மாலை மாற்றிக் கொண்டு சிந்தூர் பூசிக் கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதோடு திருமணத்திற்கு சம்மதம் கூறி இருவரும் எழுத்துப்பூர்வமாக கையொப்பமிட்ட கடிதம் ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வவருகிறது.

இந்த சம்பவம் ஒரு திட்டத்தின் பகுதி என்று பேராசிரியை கூறினார். வீடியோ பரவியதை தொடர்ந்து, பல்கலைக்கழக அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

மேலும், பேராசிரியை விடுப்பில் செல்லுமாறு கேட்டுக்கொண்டனர்.”இது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது.

இது ஒரு திட்டத்தின் ஒரு பகுதி. part of a psycho-drama demonstration for her class
ஃபிரெஷர்ஸ் பார்ட்டிக்காக நாங்கள் திட்டமிட்டு நடத்திய நாடகம் இது.

எனக்கு எதிரான சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த வீடியோ வேண்டுமென்றே வைரலாக்கப்பட்டது.

என் மீது அவதூறு செய்ய முயன்றவர்கள் மீது நான் காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன்,\” என்று பேராசிரியை கூறியுள்ளார்.

.துணைவேந்தர் தபஸ் சக்ரவர்த்தி, இந்த விவகாரம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டு வருவதாகவும், அதை விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இது தனது பாடத்தில் நடந்த திட்டத்தின் ஒரு பகுதி என்று பேராசிரியை விளக்கியதாக அவர் கூறினார்.

Share.
Leave A Reply

Exit mobile version