தந்தை பெரியார் குறித்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். இதனால், தந்தை பெரியார் ஆதரவாளர்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை கண்டனங்கள் எழுந்து வருகிறது.

இருப்பினும், சீமான் தொடர்ந்து தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், இன்று புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பார்த்திபனிடம், பெரியார் குறித்து சீமான் சர்ச்சையாக பேசி வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், “பெரியாரை கொஞ்சம் சிறியோர் ஆக்குவதற்கு சீமானுக்கு எதாவது ஒரு காரணம் இருக்கலாம். இந்த விவகாரத்தை பற்றி நாம் பேசாமல் விட்டுவிடுவது நல்லது என்று நினைக்கிறேன்.

பெரியார் எவ்வளவு பெரிய பெரியாராக இருந்தால் இன்றைய அரசியலுக்கும் அவர் தான் தேவைப்படுகிறார். சீமான் இன்று அரசியல் செய்வதற்கே தந்தை பெரியார்தான் தேவைப்படுகிறார்” என்று தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version