சென்னை திருமுல்லைவாயில் அருகே சரியான நேரத்துக்கு உணவு வழங்கவில்லை என்று மனைவியை கொலை செய்ததாக கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

“திருமுல்லைவாயில் அருகே கமலா நகர் எனும் பகுதியை சேர்ந்தவர் விநாயகம் (75). அவருடைய மனைவி தனலட்சுமி (65), மகன்கள் கணபதி மற்றும் மணிகண்டன்.

விநாயகம் நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வருகிறார். ஏற்கெனவே அறுவை சிகிச்சை ஒன்றால் காலை இழந்த அவர், தொடர்ச்சியாக சரியான நேரத்தில் தனக்கு உணவு வழங்க வேண்டும் என்று தன்னுடைய மனைவி தனலட்சுமியிடம் கூறியுள்ளார். புதன்கிழமை அன்று தனலட்சுமிக்கும் உடல்நிலை சரியில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏன் சரியான நேரத்துக்கு உணவு வழங்கவில்லை என்று விநாயகம் தனலட்சுமியுடன் சண்டையிட, ஆத்திரமடைந்த விநாயகம் தனலட்சுமியை கத்தியால் தாக்கியதாகவும் இதில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் அச்செய்தி கூறுகிறது.

மேலும், “மனைவியை தாக்கிய விநாயகமும் தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார்.

விபரம் தெரிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருமுல்லைவாயில் காவல்துறையினர் தனலட்சுமியின் உடலை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விநாயகத்துக்கும் அங்கே சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.” என செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version