யுஎஸ்எயிட்டின் வெளிநாடுகளில் பணியாற்றும் 2000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியிலிருந்து நீக்கும் ஜனாதிபதிடிரம்பின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக அந்நாட்டு ட நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். போரால் பாதிக்கப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உலக நாடுகளுக்கு கல்வி சுகாதாரம் போன்ற மனிதாபிமான உதவிகளை செய்ய அமெரிக்க அரசு யுஎஸ்எயிட்அமைப்பை கடந்த 60 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இந்த அமைப்பிற்கு ஆண்டுதோறும் அமெரிக்கா நிதி ஒதுக்குகிறது.

அந்த நிதியின் மூலம் 100க்கும் மேற்பட்ட நாடுகள் பலன் அடைகின்றன. ஆனால் இந்த நிதி உதவி அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்தப்படுவதாகவும் தவறான நோக்கங்களுக்கு செலவிடப்படுவதாகவும் டிரம்ப் நிர்வாகம் குற்றம்சாட்டி நிதி உதவியை நிறுத்தி உள்ளது. மேலும் உலகின் பெரும் பணக்காரர் எலான் மஸ்க் தலைமையிலான அரசின் செயல்திறன் குழு யுஎஸ்எய்டை முழுமையாக மூட பரிந்துரைத்தது. அதற்கு டிரம்ப் ஒப்புதல் வழங்கிய நிலையில் அதற்கான பணிகள் வேகமாக நடக்கின்றன.

அதன் ஒரு கட்டமாக யுஎஸ்எய்டு அமைப்பிற்காக வெளிநாடுகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிர்வாக விடுப்பு வழங்கப்படுவதாகவும் அவர்கள் அடுத்த 30 நாட்களுக்குள் தங்கள் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு அமெரிக்கா திரும்ப வேண்டுமெனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு செலவு அரசு தரப்பில் தரப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து யுஎஸ்எயிட்ஊழியர்கள் தரப்பில் வாஷிங்டனில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்ல் நிக்கோலஸ் நிர்வாக விடுப்பு மற்றும் 30 நாள் கெடு உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். ஆனாலும் யுஎஸ்எயிட் அமைப்பிற்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்திய டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டார். இந்த 2 உத்தரவாலும் வெளிநாடுகளில் பணியாற்றும் சுமார் 2200 ஊழியர்களை டிரம்ப் நிர்வாகம் பணிநீக்கம் செய்வது தற்காலிகமாக தடுக்கப்பட்டுள்ளது.

இதே போல மஸ்க்கின் செயல்திறன் குழு அமெரிக்காவின் நிதி விவகாரங்களை கவனிக்கும் கருவூலத் துறையின் முக்கிய ஆவணங்களை அணுகுவதற்கு தற்காலிக தடை விதித்து நீதிபதி பால் என்ஜெல்மேயர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாகஇவருமான வரி ரீபண்ட்கள் சமூக பாதுகாப்பு பயனாளிகள் முதியோர் நிதி உதவி உள்ளிட்ட கோடிக்கணக்கான கணக்கு வழக்குகள் அரசின் திட்டங்கள் மூலம் பலனடையும் பயனாளிகளின் விவரங்களை மஸ்க் குழு பார்வையிட டிரம்ப் நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்தது. அரசாங்கத்தின் தேவையற்ற செலவுகளை குறைக்க மஸ்க் தலைமையில் அதிபர் டிரம்ப் குழு அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் தங்கி உள்ள சட்டவிரோத குடியேறிகளை கண்டறியும் பணியில் அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்க அதிகாரிகளுக்கு உள்ளூர் போலீசாரும் உதவலாம் என்கிற உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் உள்ளூர் காவல் அதிகாரிகள் நேரடியாக சந்தேகிக்கப்படும் நபரை நடுரோட்டில் நிறுத்தி குடியேற்ற ஆவணங்களை சரிபார்த்து கைது செய்ய முடியும். நிறவெறிக்கு எதிரான பிரச்னையை தூண்டியதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த நடைமுறையை டிரம்ப் மீண்டும் கொண்டு வந்திருப்பது அமெரிக்காவில் பிரச்னைகளை அதிகரிக்க வழிவகுக்கும்.

Share.
Leave A Reply

Exit mobile version