ஹமாசினால் பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சிறிபிபாஸ் என்ற இரண்டு பிள்ளைகளின் தாயின் உடலை ஒப்படைக்காதமைக்கான விலையை ஹமாஸ் செலுத்தும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு எச்சரித்துள்ளார்.

ஒக்டோபர் 2023 ஏழாம் திகதி பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட சிறிபிபாஸ் அவரது இரண்டு குழந்தைகள் உட்பட நால்வரின் உடலை இஸ்ரேலிடம் ஒப்படைத்துள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

நால்வரின் உடல்களை ஹமாஸ் ஒப்படைத்துள்ளது.

இந்த உடல்கள் இஸ்ரேலின் தேசிய தடயவியல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிறிபிபாஸின் உடலை ஹமாஸ் ஒப்படைக்கவில்லை என இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நான்கு உடல்களில் ஒன்று இஸ்ரேலிய பணயக்கைதியுடையது இல்லை என இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து ஹமாசினை இஸ்ரேலிய பிரதமர் கடுமையாக சாடியுள்ளார்.

உயிருடன் உள்ள உயிரிழந்த சிறி உட்பட அனைத்து பணயக்கைதிகளையும் நாட்டிற்கு கொண்டுவருவதற்கு நாங்கள் உறுதிப்பாட்டுடன் செயற்படுவோம் இந்த ஈவிரக்கமற்ற தீய உடன்படிக்கை மீறலிற்கான விலையை ஹமாஸ் செலுத்த செய்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version