தபால் திணைக்கள அலுவலக உதவியாளர் ஒருவர் ரூ.11,000 லஞ்சம் பெற்ற வழக்கில், அவருக்கு 28 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை ஏழு ஆண்டுகளில் அனுபவிக்கப்படும் படியாக விதிக்கபட்டுள்ளது.

மீரிகவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அளித்த முறைப்பாடு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

மனுதாரரின் கூற்றுப்படி, மத்திய தபால் பரிமாற்றத்தின் சர்வதேச விரைவுப் பிரிவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 30 சிசிடிவி கமராக்களை வரியின்றி விடுவிக்க அலுவலக உதவியாளர் லஞ்சம் கோரியதாக கூறப்படுகிறது.

நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் அலுவலக உதவியாளருக்கு தலா 07 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும், அலுவலக உதவியாளருக்கு ரூ. 5000 அபராதம் விதித்த நீதிபதி, பணத்தை செலுத்தத் தவறினால் கூடுதலாக 06 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version