கனடாவின் டொராண்டோவின் கிழக்கே உள்ள ஸ்கார்பரோ நகரிலுள்ள கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சுமார் 12 பேர் காயமடைந்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் 20 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுடன் அவர்கள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு இரண்டு நபர்களால் நடத்தப்பட்டதாகவும் சந்தேக நபர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, தப்பியோடிய சந்தேகநபர்களை அந்நாட்டு பொலிஸார் தேடி வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version