யாழ்ப்பாணம் (Jaffna) – வடமராட்சி பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

குறித்த மாணவன் நேற்றைய தினம் (07) இரவு 7:30 மணியளவில் தனது வீட்டில் தவறான முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

கரவெட்டி – மத்தணி பகுதியைச் சேர்ந்த நகுலேஸ்வரன் யக்சன் என்ற வயது 14 மாணவனே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

உயிரிழந்த குறித்த மாணவன் யா/ கரவெட்டி இருதயக்கல்லூரியில் தரம் 9இல் கல்வி கற்று வந்துள்ளார்.

யாழில் தவறான முடிவெடுத்து பாடசாலை மாணவன் உயிர்மாய்ப்பு! | 14 Years Old School Student Died Jaffna

இந்தநிலையில் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெல்லியடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version