கிளிநொச்சி, பளை – வேம்படிக்கேணியில் கிணற்றிலிருந்து ஆசிரியை ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தனிநபருக்குச் சொந்தமான காணியில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து மேற்படி ஆசிரியையின் சடலம் நேற்று (07) மீட்கப்பட்டுள்ளது.
துர்நாற்றம் வீசுவதை அறிந்து அயலவர்கள் குறித்த கிணற்றை நேற்று காலை அவதானித்தனர். அந்தக் கிணற்றை அவர்கள் பரிசோதித்தபோது, கிணற்றில் பெண் ஒருவர் சடலமாகக் காணப்பட்டதை அடுத்து, இது தொடர்பில் பளை பொலிஸாருக்கு அறிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார், சடலத்தை மீட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.
சடலமாக மீட்கப்பட்ட பெண் அதே பகுதியை சேர்ந்த ஆசிரியையான 54 வயதுடைய தவராசசிங்கம் சரஸ்வதி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்