நெலுவ – பெலவத்த வீதியில் தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற லொறியுடன் முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த இருவரும் நெலுவ, களுபோவிட்டியாவ பகுதியைச் சேர்ந்த 55 மற்றும் 27 வயதுடைய இரண்டு பெண்களாவர்.

நெலுவவிலிருந்து பெலவத்தை நோக்கிச் சென்ற லொறி, பெலவத்தையிலிருந்து நெலுவ நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியுடன் ஹதே கணுவ பிரதேசத்தில் நேருக்கு நேர் மோதியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் மீகஹதென்ன வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர், அங்கு இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

லொறி மற்றும் முச்சக்கர வண்டி பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளதுடன், தினியாவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version