எல்ல லிட்டில் ஸ்ரீ பாதவைப் பார்வையிடச் சென்ற 64 வயது பிரெஞ்சுப் பெண் ஒருவர் பாறையிலிருந்து தவறி விழுந்துள்ளார்.

சம்பவத்தில் அவரது தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்த விபத்து நேற்று மாலை (19) செங்குத்தான பகுதியொன்றில் வைத்து இடம்பெற்றதாகவும் ,Flying Rawana ஊழியர்கள் ட்ரோன் கேமராக்களின் உதவியுடன் அவர் விழுந்த பகுதியைத் தேடி கண்டறிந்து, உயிர் காக்கும் பிரிவு அதிகாரிகள் அவரை பாதுகாப்பான பகுதிக்கு கொண்டுவந்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட வெளிநாட்டு பெண் தற்போது தெமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிசிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version