மியன்மாரின் மண்டலாயில் கட்டிட இடிபாடுகளிற்குள் சிக்குண்டவர்கள்; தங்களை காப்பாற்றுமாறு இன்னமும் மன்றாடிக்கொண்டிருக்கின்றனர் என பிபிசி தெரிவித்துள்ளது.
உயர்மாடிக்கட்டிடமொன்று இடிந்து விழுந்ததில் இடிபாடுகளிற்குள் சிக்குண்ட ஏழுபேரைகாப்பாற்றுவதற்கான முயற்சிகளில் மீட்பு பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
நேற்றிரவு இந்த கட்டிட இடிபாடுகளிற்குள் இருந்து 50 பேரை மீட்டதாக ஒருவர் தெரிவித்தார்.
மியன்மாரை பூகம்பம் உலுக்கி 24 மணித்தியாலங்களிற்கு மேலாகின்றது.
பெரும் இயந்திரங்கள் இருந்தால் இடிபாடுகளை அகற்றி அவர்களை காப்பாற்ற முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.