சீனாவில் 13 வயது சிறுவன் தனது தாய்க்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார்.

இந்த சம்பவம் ஃபுஜியன் மாகாணத்தில் நடந்துள்ளது. 13 வயது சிறுவன் ஒருவன் அவசர சிகிச்சை மையத்தை அழைத்து, தனது 37 வார கர்ப்பிணித் தாயின் பனிக்குடம் உடைந்து விட்டதாகவும், அவருக்கு கடுமையான வலி ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், செல்போனில் மருத்துவ உதவியாளர் சென் சாயோஷூனின் ஆலோசனையின் படி தனது தாய்க்கு சிறுவன் பிரசவம் பார்த்துள்ளார். இதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

சிறிது நேரத்திற்குப் பிறகு, மருத்துவ உதவியாளர்கள் வந்து தாயையும் குழந்தையையும் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version