இந்திய தலைநகர் டெல்லியின் நியூ உஸ்மான்பூர் பகுதியில் உள்ள பூங்காவில் இளைஞர் ஒருவர் நேற்று (30) மாலை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார் குறித்த இளைஞரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். ஆனால், இளைஞரை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

இது தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த பொலிஸார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை தொடங்கினர். விசாரணையில் கொல்லப்பட்ட இளைஞர் தில்ஷித் (வயது 20) என்பதும் 500 ரூபா பணத்திற்காக அவர் கொல்லப்பட்டதும் தெரியவந்தது.

தில்ஷித் இடமிருந்து 500 ரூபா பணத்தை திருட இரு சிறுவர்கள் உள்பட 3 பேர் முயற்சித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட மோதலில் தில்ஷித்தை 3 பேரும் கத்தியால் குத்திக்கொன்றனர். இதையடுத்து தில்ஷித்தை கொலை செய்த சிறுவர்கள் உள்பட 3 பேரை பொலிஸார் கைது செய்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version