“பாட்ஷா படத்தை தயாரித்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி நடிகர் ரஜினிகாந்த், ஆர்.எம்.வீரப்பன் குறித்து பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ரஜினிகாந்த் பேசியதாவது:-
அனைவருக்கும் வணக்கம்.. ஆர்.எம்.வி. தி கிங் மேக்கர் தி டாகுமெண்டரி… இதுல அவரைப்பற்றி பேசுவதற்கு மிக்க மகிழ்ச்சி. என்னுடன் நெருங்கிய நெருக்கம், அன்பு, மரியாதை காட்டியவர்களில் மூன்று, நான்கு பேர். அதாவது, பாலசந்தர், சோ, பஞ்சு அருணாச்சலம், ஆர்.எம்.பி. சார். இவங்க எல்லாம் இல்லைங்கற போது சில நேரத்தில் ரொம்ப மிஸ் பண்றோம்.
‘பாட்ஷா’ 100-வது நாள் விழாவில் வெடிகுண்டு கலாச்சாரத்தை பேசினேன். அமைச்சர் மேடையில் இருக்கும் போது பேசியிருக்க கூடாது. அப்போ எனக்கு தெளிவு இல்லை.
பேசிட்டேன். அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்த எம்.ஆர்.வீரப்பனை, புரட்சித்தலைவி பதவியில் இருந்து தூக்கிட்டாங்க. எப்படி அது நீங்க அமைச்சர் மேடையில் இருக்கும் போது ரஜினி, அரசுக்கு எதிராக பேசினால் சும்மா இருக்க முடியும் என்று சொல்லி எம்.ஆர்.வீரப்பனை பதவியில் இருந்து தூக்கினாங்க.
அது தெரிந்த உடனே எனக்கு ஆடிப்போச்சு. என்னால தான் இப்படி ஆனது என்று நினைத்து இரவு முழுவதும் தூக்கம் வரலை. போன் பண்ணா யாருமே எடுக்கலை. மறுநாள் காலையில் நேரில் போய் சாரி சார் என்னால தான் ஆனது என்று சொன்னார்.
அவர் எதுவுமே நடக்காத மாதிரி.. அதெல்லாம் விடுங்க… அதைப்பற்றி கவலைப்படாதீங்க… மனசுல வெச்சுக்காதீங்க… நீங்க விடுங்க. சந்தோஷமா இருங்க… எங்க ஷுட்டிங் என்று சாதாரணமா கேட்டார்.
எனக்கு அந்த தழும்பு எப்போதும் போகாது. போகலை. ஏன் என்றால் நான் தான் கடைசியா பேசினது. நான் பேசினதுக்கு பிறகு அவரு எப்படி வந்து பேச முடியும். மதிப்பிற்குரிய ஜெயலலிதாவுக்கு எதிராக பேசுவதற்கு சில காரணங்கள் இருந்தாலும் கூட இந்த காரணம் முக்கியமானது என்றார்.
#Thalaivar video byte for Late RM Verappan ayya . #Baasha producer and Ex minister
He shares about Baasha 100th day function which #SuperstarRajinikanth spoke against late Jayalalitha which resulted of sacking him from ministry .” #Rajinikanth | #Superstar @rajinikanth |… pic.twitter.com/nWFPgpGPSB
— Suresh balaji (@surbalutwt) April 9, 2025