நடிகர் ரஜினிகாந்த் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்றை அனிருத் பகிர்ந்திருக்கிறார்.

இசையமைப்பாளர் அனிருத் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் தன்னுடைய திரைத்துறை அனுபவம் பற்றியும் இசையமைப்புப் பணிகள் பற்றியும் பேசியிருக்கிறார். அதில், நடிகர் ரஜினிகாந்த் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்றையும் அனிருத் பகிர்ந்திருக்கிறார்.

ரஜினிகாந்த் குறித்துப் பேசியிருக்கும் அனிருத், “பொதுவாக ஹீரோக்களாக இருப்பவர்கள் நல்ல வசதியான சௌகரியமான Suite ரூம்களில் தங்குவதைத்தான் விரும்புவார்கள். ஆனால், ரஜினிகாந்த் அப்படியில்லை.

நான் ஒரு உதாரணமே சொல்கிறேன். ஒரு முறை அவர் லண்டனுக்கு செல்ல வேண்டும். அங்கே அவருக்கு புக் செய்யப்பட்டிருந்த அறைக்கு ஓர் இரவுக்கு 20,000 ரூபாய் கட்டணம். ஓர் இரவுக்கு அவ்வளவு கட்டணமா என சொல்லி லண்டனுக்கு செல்லும் விமான டிக்கெட்டையே கேன்சல் செய்யச் சொல்லிவிட்டார்.

நான் சிறுவயதிலிருந்து இப்படியான விஷயங்களைப் பார்த்துதான் வளர்ந்திருக்கிறேன். அதனால் கொஞ்சம் அதிகமாக செலவளிக்க வேண்டுமென்றாலே ஒரு மாதிரியாக இருக்கும்”என்று கூறியிருக்கிறார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version