“தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் கடைசியாக விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான குஷி திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

மேலும் சமீபத்தில் வெளியான சிடாடெல்: ஹனி பனி வெப் தொடரில் நடித்து இருந்தார். இத்தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.சமந்தா ட்ரலாலா பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதில் சுபம் என்ற திரைப்படத்தை தயாரித்து முடித்துள்ளார்.

இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் வரும் மே 9 வெளியாகிறது.படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று விசாகப்பட்டினத்தில் நடைப்பெற்றது.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் சமந்தா மேடையில் பாடும் பாட்டை கேட்டு எமோஷனலாகி கண் கலங்கும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது.

அதற்கு நெட்டிசன்கள் பலரும் பல விதமாக கமெண்ட்ஸை பதிவிட்டு வந்தனர். சமந்தா மிகவும் பாவம், அவரது மனதில் நிறைய வலி இருக்கிரது போன்ற செய்திகள் இணையத்தில் வலம் வந்துக் கொண்டு இருக்கிறது.

இதனை தெளிவு படுத்தும் வகையில் இன்ஸ்டாகிராமில் சமந்தா பதிவிட்டுள்ளார் அதில் ” நேற்று நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற்றது.

விசாகப்பட்டின மக்களுக்கு நன்றி. நீங்கள் என்மீது காட்டும் அன்புக்கு மிக்க நன்றி. நான் கண்கலங்கும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

நான் ஏற்கனவே பல இடத்தில் கூறியிருக்கிறேன். ஆனாலும் மீண்டும் கூறுகிறேன், என் கண்கள் மிகவும் சென்சிட்டிவானது.

பிரகாசமான லைட்டுகளை பார்த்தால் என் கண்ணில் இருந்து தண்ணீர் வடியும் இதனை பலரும் நான் எமோஷனலாகி அழுகிறேன் என புரிந்துக் கொள்கின்றனர். நான் மிகவும் நன்றாக இருக்கிறேன், மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்\” என கூறியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version