யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலுடன், பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கச்சருவேலி ரயில் கடவைக்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட விபத்தில் 46 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார்.

ரயில்வே சிக்னல்கள் செயலில் இருந்தபோது விபத்து நிகழ்ந்ததாகவும், எச்சரிக்கையை மீறி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தண்டவாளத்தைக் கடக்க முயன்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் அவர் பளையைச் சேர்ந்தவர் எனவும் அடையாளங் காணப்பட்டுள்ளது.

பளை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version