வெசாக் பண்டிகையை பார்வையிடுவதற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற காதல் ஜோடி, தனியார் பேருந்தில் மோதி உயிரிழந்துள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அலஸ்வத்தை, கிரிமதிமுல்ல, தெலிஜ்ஜவிலவைச் சேர்ந்த விக்கிரமசிங்க கமச்சிகே மிலன் சமீர (30) என்ற இளைஞனும், பொல்ஹேன காசிவத்தபுரத்தைச் சேர்ந்த எதிரிசிங்க எமெல்ஷி ஹவிஸ்கா டயஸ் (23) என்ற யுவதியும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞன் தெலிஜ்ஜவில சதொச கிளையில் காசாளராகவும், உயிரிழந்த இளம் பெண் மாத்தறை நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் எழுத்தராகவும் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது.

மாத்தறையிலிருந்து தெவிநுவர நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த அவர்கள், மாத்தறையிலிருந்து திஸ்ஸமஹாராம நோக்கிச் சென்ற தனியார் பேருந்தின் பின்புற சக்கரங்களுக்கு அடியில் சிக்கி நசுங்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version