“இன்றைய தலைமுறையினர் சந்திக்கும் சரும அல்லது அழகு சார்ந்த பிரச்சனைகளில் கருவளையமும் ஒன்று. முன்பெல்லாம் பெரும்பாலான முதியவர்களுக்கு மட்டும் தான் கருவளையம் இருக்கும்.

ஆனால் தற்போது வயது வரம்பு இல்லாமல் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என எல்லோருக்கும் வந்து விடுகிறது.

கருவளையம் ஏற்பட காரணம்? உடலில் மெலனின் அதிகமாக உற்பத்தி ஆகும் போது தான் கருவளையம் ஏற்படுகிறது.

சில நேரங்களில் தோல் அழற்சி, நீரிழப்பு காரணமாகவும் கருவளையம் ஏற்படும்.கருவளையம் வந்துவிட்டதே என்ன செய்யலாம் என்று அதற்கான தீர்வை தேடுவோம்.

ஆனால் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே கருவளையத்தை போக்குவதற்கான சிறந்த வழிகள் இதோ…

கற்றாழை ஜெல்சரு

சரும பராமரிப்பில் கற்றாழைக்கு எப்போதும் முதல் இடம் தான். ஏனென்றால் சருமத்திற்கு மாய்ஸ்சரைசராக செயல்படும் கற்றாழையின் ஜெல் சருமத்திற்கு நீண்ட கால ஆரோக்கியத்தைத் தருகிறது.

கற்றாழை ஜெல்லை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதன்பிறகு அதை எடுத்து கண்ணுக்குக் கீழ் உள்ள கருவளையம் இருக்கும் பகுதியில் தடவ வேண்டும்.

பிறகு 5 முதல் 10 நிமிடங்கள் வரை மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இவற்றை இரவு முழுவதும் வைத்திருப்பது சிறந்தது.

கண்கள் குளிர்ச்சியாக இருப்பதுடன், நல்ல ஓய்வு கிடைக்கும். இவ்வாறு செய்து வர, கண்களின் கீழ் உள்ள கருவளையத்தை எளிதாக நீக்கி விடலாம்.

உருளை மற்றும் வெள்ளரி சாறு

உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளரிக்காய் சாற்றில் ஆன்டி ஆக்ஸிடன்டுகள், வைட்டமின்கள் போன்றவை அதிகமாக நிறைந்துள்ளன.

இவை சருமத்தில் உண்டாகும் தொற்றுக்களை சரி செய்ய உதவுகிறது. உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளரிக்காயை தனித்தனியே சிறிதளவு துருவி,

அதன் சாற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் இரண்டையும் கலந்து கண்களுக்குக் கீழ் உள்ள கருவளையத்தில் தடவ வேண்டும். பின்னர் 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம்.

தொடர்ந்து இவ்வாறு செய்துவர கருவளையம் படிப்படியாக குறையும்.

ரோஸ்வாட்டர்

ரோஸ் வாட்டரை சருமத்திற்கு பயன்படுத்துவது மிகவும் நல்லது.

இது இறந்த செல்களை நீக்கி, புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. காட்டன் துணியை ரோஸ்வாட்டரில் நனைத்து அதனை கண் கருவளையம் உள்ள பகுதியில் வைக்க வேண்டும்.

இவ்வாறு 15 – 20 நிமிடங்கள் வைத்திருக்கலாம். இதனைத் தினமும் தொடர்ந்து செய்து வர கருவளையங்கள் எளிதாக நீங்கி விடும்.பால்பாலில் உள்ள லாக்டிக் அமிலம், சருமத்தின் கருமை நிறத்தை நீக்கி, கண்ணுக்குக் கீழ் உள்ள கருவளையங்களையும் நீக்க உதவி செய்கிறது.

மேலும், இதில் உள்ள பொட்டாசியம் சத்துகள் சருமத்தை மாய்ஸ்சரைசராக வைத்திருக்க உதவுகிறது. இதற்கு காட்டன் பஞ்சு ஒன்றை பாலில் நனைத்து, அதனை கண்ணைச் சுற்றியுள்ள பகுதிகளில் தடவ வேண்டும். அதன்பிறகு 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விடலாம்.”,

Share.
Leave A Reply

Exit mobile version