ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாணவி சோபனா சமீபத்தில் நடந்து முடிந்த 12ம் வகுப்பு தேர்வில் 600க்கு 562 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்த சோபனா வீட்டின் நிலையை உணர்ந்து நன்று படித்து நல்ல மதிப்பெண்களை பெற்றுள்ளார்.
மீனவ குடும்பத்தில் பிறந்த மாணவி வறுமை காரணமாக வேலைக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார்.
ஆனால், குடும்ப வறுமை காரணமாக மேற்படிப்பு தொடர முடியுமா என்ற கேள்வி எழுந்தது.இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மாணவிக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
சூழலால் படிப்பை தொடரமுடியாமல், தவித்த ராமநாதபுரம் மாணவி சோபனாவிற்கு உயர்கல்விக்கான உதவிகளைச் கமல்ஹாசன் செய்துள்ளார்.மேலும், மாணவியின் கனவை எட்ட, குடிமைப்பணித் தேர்வுகளுக்கு தயாராவதற்கான ஏற்பாடுகளையும் கமல்ஹாசன் செய்து கொடுத்துள்ளார். “,