ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையான இளைஞர் ஒருவர் மது போதையில் சேற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
கே.கே.எஸ். வீதி வண்ணார் பண்ணையைச் சேர்ந்த பாலச்சந்திரன் சசிராஜ் (வயது 29) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேற்படி இளைஞரின் வீட்டார் மட்டக்களப்புக்கு சென்ற நிலையில் சகோதரன் ஒருவர் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். இந் நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை (17) வீட்டில் மது விருந்து நடைபெற்று முடிந்த நிலையில் வெளியில் சென்ற இளைஞர் சேற்றில் விழுந்து உயிரிழந்தார்.
இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை யாழ்ப்பாண பொலிஸார் நெறிப்படுத்தினர்.