முல்லைத்தீவு, குமுழமுனை, கொட்டுக்கிணற்றுப் பிள்ளையார் ஆலயக் கேணியில் இன்று செல்பி எடுக்கச் சென்ற பாடசாலை மாணவிகள் இருவர், கேணிக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளனர்.

கேணிக்குள் தவறி வீழ்ந்த இரு மாணவிகளும் ஆபத்தான நிலையில் குமுழமுனை இளைஞர்களால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

குறித்த இருவரும் பூதன்வயல், மாமூலை பகுதியில் வசிக்கும் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவிகள் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version