“சென்னையில் இருந்து தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் புறப்பட்ட இண்டிகோ ஏா்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக அவசரமாக விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதால் 165 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

சென்னையில் இருந்து தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் புறப்பட்ட இண்டிகோ ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம், ஞாயிற்றுக்கிழமை மாலை 3.40 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து 159 பயணிகள், 6 விமான ஊழியா்கள், 165 பேருடன் ஹைதராபாத் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.

விமானம் நடு வானில் ஆந்திர மாநிலம் நெல்லூரைக் கடந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது.

இதனை அறிந்த விமானி, அவசரமாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடா்பு கொண்டாா்.

உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், விமானத்தை மேற்கொண்டு செலுத்த வேண்டாம்.

உடனடியாக சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்குமாறு உத்தரவிட்டனர். இதையடுத்து இண்டிகோ ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறக்கப்பட்டது.

விமானத்தின் இயந்திரக்கோளாறை தகுந்த நேரத்தில் கண்டுபிக்கப்பட்டு பத்திரமாக தரை இறக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டு 159 பயணிகள், 6 விமான ஊழியா்கள் என 165 போ் நல்வாய்ப்பாக உயிா்த்தப்பினா்.

இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.

Share.
Leave A Reply

Exit mobile version