“பெரும்பாலான நோய்களுக்கு மூல காரணம் மலச்சிக்கல் தான். மலச்சிக்கல் காரணமாக வயிற்றில் சேரும் கழிவுகள் தான் நோயை உண்டாக்குகின்றன என்று இயற்கை மருத்துவத்தில் கூறுகிறோம்.

மலச்சிக்கல் என்பது அஜீரணத்தால் ஏற்படுகிறது. இதனால் வயிறு வீக்கம், மூல நோய், பவுத்தரம், தோல் நோய்கள், முடி உதிர்தல், அல்சைமர் நோய், மனச்சோர்வு, பதட்டம் என பல தொல்லைகள் உண்டாகிறது.

இன்று மலச்சிக்கல் என்றால் என்ன, அதன் காரணங்கள் மற்றும் தீர்வுகள் பற்றி ஆழமாகப் பார்ப்போம்.

முதலில் செரிமான அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் உண்ணும் உணவு, உணவுக் குழாயில் நுழைந்து வயிற்றை அடைகிறது. வயிற்றில் சுரக்கும் ஒரு வலுவான அமிலம் உணவில் உள்ள புரதத்தை ஜீரணிக்கவும் சில வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை உறிஞ்சவும் உதவுகிறது.

இந்த உணவு அடுத்தக் கட்டமாக சிறுகுடலுக்குள் நுழைந்த பிறகு ஒரு முக்கியமான நிகழ்வு நடக்கிறது.

அதாவது பித்தப்பையில் இருந்து பித்த நீர் சுரப்பை தூண்டுகிறது.பித்தநீர் நமது உடலில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கொழுப்பு செரிமானத்திற்கு உதவுகிறது, மேலும் கணையத்திலிருந்து செரிமான நொதிகள் சுரப்பதைத் தூண்டுகிறது.

நம் உடலில் பித்த நீர் முறையாக சுரந்தால் தான் நாம் உண்ணும் உணவில் இருக்கும் கொழுப்பு நன்கு சீரணமாகும்.

அதாவது பித்தநீர், கணையத்திலிருந்து நொதிகளைத் தூண்டி கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகளை ஜீரணிக்கச் செய்கிறது.

மேலும் குடலில் அசைவுகளை ஏற்படுத்தி உணவை செரிமாணம் செய்ய அடுத்தடுத்த நிலைகளுக்கு நகர்த்தும் செயலை செய்கிறது.பித்த நீர் குறைபாடு மலச்சிக்கலை ஏற்படுத்துகிறது.

முழுமையாக சீரணிக்கப்படாமல் கழிவுகள் தேங்குவதால் வாயுத் தொல்லை ஏற்படுகிறது. அதிகப்படியான பித்தம் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்.

இதற்கு அடுத்து சிறுகுடலில் இருந்து உணவு பெருங்குடலுக்குள் நுழைகிறது. பெருங்குடலில் நன்மை செய்யும் பாக்டீரியா, ஈஸ்ட் மற்றும் மில்லியன் கணக்கான நுண்ணுயிரிகள் உள்ளன.

இந்த நுண்ணுயிரிகள் தான் மலத்தை உருவாக்க உதவுகின்றன, அவை இறுதியில் வெளியேற்றப்படுகின்றன.மலச்சிக்கலுக்கான காரணங்கள்:மேற்கூறிய எந்தவொரு வழிமுறையிலும் ஏற்படும் குறைபாடுகள் காரணமாக மலச்சிக்கல் ஏற்படலாம்.

அதாவது வயிற்றில் குறைவாக அமிலம் சுரப்பது, குறைந்தளவு பித்த நீர் சுரப்பது, பெருங்குடலில் நல்ல நுண்ணுயிரிகள் போதுமான அளவில் இல்லாமல் இருப்பது மலச்சிக்கலுக்கு காரணமாக இருக்கலாம்.

டாக்டர் நிஷாஎனவே மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிக்க, மூல காரணத்தைக் கண்டறிய வேண்டும். ஒரு நபர் ஆன்டிபயாடிக் எடுத்திருந்தால் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, அவர் நல்ல பாக்டீரியாக்கள் உருவாகக்கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் மலச்சிக்கல் உண்டாகலாம். அப்படி இருந்தால், நாம் ஊட்டச்சத்தை சரிசெய்ய வேண்டும்,

ஏனெனில் வைட்டமின் பி1 போன்ற சில ஊட்டச்சத்துக்கள் பெருங்குடலின் இயக்கத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன.

அவர் ஆரோக்கியமற்ற உணவை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.மன அழுத்தம் காரணமாகவும் செரிமானம் பாதிக்கப்படும். எனவே மன அழுத்தம் மலச்சிக்கலுக்கு ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம்.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மனத்தளர்வு மற்றும் ஓய்வு உதவும். எனவே நாம் காரணத்தைப் புரிந்துகொண்டு அதை நிவர்த்தி செய்ய வேண்டும்மலச்சிக்கலுக்கான தீர்வுகள்:ஒருவருக்கு மலச்சிக்கல் நீண்ட காலமாக இருந்தால், ஸ்கேன் எடுத்து பெருங்குடலில் ஏதேனும் கட்டமைப்பு அசாதாரணம் உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.

தண்ணீர் குடிப்பது உதவியாக இருக்கும், ஆனால் எலக்ட்ரோலைட்டுகள் கொண்ட திரவங்களை குடிப்பது உதவும்.

உதாரணமாக, எலுமிச்சை நீர், மோர், பால், சர்க்கரை இல்லாத பழச்சாறுகள், இளநீர் போன்றவை. உடல் எப்போதும் நன்கு நீரேற்றமாக இருக்க வேண்டும். வாய் மற்றும் தொண்டை ஒருபோதும் வறண்டதாக உணரக்கூடாது.

உணவு செரிமானத்தில் முக்கிய பங்காற்றும் வயிற்று அமிலத்தன்மை மற்றும் பித்தத்தை அதிகரிப்பது எப்படி?

கசப்பான உணவுகளை உண்ணுங்கள்…இஞ்சி, மிளகு ஆகியவற்றை உணவில் சேர்க்கவும்…உடற்பயிற்சி செய்யவும்…

பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்…நன்றாகமென்று சாப்பிடுங்கள்…சமச்சீரான உணவை உண்ணுங்கள்…நிதானமாக இருங்கள்…உணவில் நல்ல கொழுப்பைச் சேர்க்கவும்…நார்ச்சத்து மிகுந்த வெண்டை, கோவைக்காய் உள்ளிட்ட காய்கறிகள், தேங்காய், ஆளிவிதை, வெந்தயம், பாதாம் பிசின், தேங்காய் எண்ணெய், போன்றவற்றை உணவில் சேர்க்கவும்.

கொய்யா, வாழைப்பழம், பேரிக்காய் மற்றும் திராட்சை போன்ற பழங்கள் மலச்சிக்கலுக்கு சிறந்தவை.வீட்டில் தயாரித்த நெல்லிக்காய் ஊறுகாயை தினமும் சாப்பிடலாம்.

இந்திய கழிப்பறைகள்:இந்திய பாணி கழிப்பறைகள் மலத்தை சிறப்பாக வெளியேற்ற உதவுகின்றன.

மேற்கத்திய கழிப்பறை என்றால் சிறிய பலகைகளை பயன்படுத்தி முழங்கால்களை இடுப்பை விட உயரமாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.

வயிற்று மசாஜ் மற்றும் சூடான பானங்கள் குடிப்பது பயனுள்ளதாக இருக்கும்.

எனவே, ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க சரியான அளவு தூக்கம், சரியான உணவு மற்றும் நிறைவான மனதுடன் ஒரு நல்ல வாழ்க்கை முறையைப் பின்பற்றுவோம்.

Share.
Leave A Reply

Exit mobile version