வவுனியா பண்டாரிக்குளத்தில் உள்ள வீடொன்றில் தீடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டின் சாமி அறையில் விளக்கு ஏற்றுவதற்காக தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவதற்கு பதிலாக தவறுதலாக பெட்ரோலை பயன்படுத்தியமையால் இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

தேங்காய் எண்ணெக்கு பதில் பெட்ரோல் ; விளக்கு ஏற்றும் போது நேர்ந்த விபரீதம் | House Burns As Lamp Lit With Petrol Poured

மேலும் குறித்த வீட்டார் இது தொடர்பாக வவுனியா மாநகர சபையின் தீயணைப்பு பிரிவுக்கு அறிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு பிரிவினர் பொதுமக்களின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version