மொரவெவ பொலிஸ் பிரிவில், திருகோணமலை -ஹொரவ்பொத்தானை பிரதான வீதியில் மிரிஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து சனிக்கிழமை (19) இரவு 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பலத்த காயமடைந்த இருவரும் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
தூக்க கலக்கமே விபத்துக்கான காரணம் எனவும், விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.