நாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (03) முதல் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேரடியாக தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுகொள்ளலாம்.

சுற்றுலா பயணிகளின் வசதியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு குறிப்பாக விமான நிலையத்திற்கு அருகில் வாகனங்களை வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கும் போது வாகனம் ஓட்ட விரும்பும் பயணிகளின் வசதியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு on-arrival சேவை மையத்தால் இன்றையதினம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், சுற்றுலாப் பயணிகள் வெரஹெரவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திலேயே நேரடியாக தற்காலிக சாரதி அனுமதி பெற்றுகொள்ளக் கூடியதாக இருந்தது.

தற்போது, பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் நாடு முழுவதும் பயணிக்க மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் இலகுரக வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர்.

எனினும், புதிய முறையின் கீழ், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இலகுரக வாகன வகைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். கனரக வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான சாரதி அனுமதி பத்திரம் விமான நிலையத்தில் மூலம் வழங்கப்படாது.

விமான நிலையத்தில் தற்காலிக இலங்கை சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்க, வெளிநாட்டவர்கள் தங்கள் சொந்த நாட்டில் பயன்படுத்திய செல்லுபடியாகும் சாரதி அனுமதி பத்திரத்தை சமர்பிக்க வேண்டும்.

பயிற்சி, தகுதிகாண், தற்காலிக உரிமங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. உரிமம் ஆங்கிலத்தில் இல்லையென்றால், சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பு தேவை. விண்ணப்பதாரர்கள் செல்லுபடியாகும் கடவுசீட்டு மற்றும் வீசாவையும் சமர்பிக்க வேண்டும்.

வெளிநாட்டு சாரதி அனுமதி பத்திரம் மாற்றப்பட்ட திகதியிலிருந்து குறைந்தது ஒரு வருடத்திற்கு செல்லுபடியானதாக இருக்க வேண்டும்.

இந்த நடைமுறை மூலம் வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதி பத்திரம் அதிகபட்சம் ஐந்து மாதங்களுக்கு மாத்திரமே செல்லுபடியாகும்.

வெளிநாட்டு உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து கட்டுப்பாடுகளும், திருத்தும் லென்ஸ்கள், தானியங்கி டிரான்ஸ்மிஷன் அல்லது செவிப்புலன் கருவிகளைப் பயன்படுத்துவதற்கான தேவைகள் – மாற்றப்பட்ட உரிமத்திற்கும் பொருந்தும்.

ஒரு மாதத்திற்கு 2,000 ரூபாய் கட்டணம் அறவிடப்படும்.

Share.
Leave A Reply

Exit mobile version