நெல்லை: தமிழகத்தை உலுக்கிய நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில், சுர்ஜித் மற்றும் அவரது தந்தையை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ள நிலையில், இன்று திடீர் திருப்பமாக சுர்ஜித்தின் ஒன்றுவிட்ட சகோதரர் ஜெயபாலன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கொலைக்கு உதவியாக ஜெயபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். இதேபோன்று இன்று சுபாஷினியிடம் சிபிசிஐடி போலீசார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இதில் அவர் பல்வேறு தகவல்களை கூறியதாக கூறப்படுகிறது. திருநெல்வேலி: நெல்லையில் இளைஞர் கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

கொலை செய்த கவினின் காதலியின் சகோதரரான சுர்ஜித் மீது மீது குண்டர் சட்டம் போடப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சுர்ஜித்தின் தந்தை காவல் உதவி ஆய்வாளர் சரவணனை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

நெல்லை கவின் ஆணவக் கொலை

நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்தவர் சரவணன். போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.

இவரது மனைவி கிருஷ்ணவேனி. இவரும் காவல் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மூத்த மகள் சுபாஷினி. இவர்களது மகன் சுர்ஜித்.

சரவணன் குடும்பத்தினர் தற்போது நெல்லை கேடிசி நகரில் வசித்து வருகின்றனர். முன்பு இவர்கள் தூத்துக்குடி ஏரல் அருகே வசித்து வந்தபோது சுபாஷினிக்கும், தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலம் தெற்கு மாடவீதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரின் மகன் கவின் (வயது 27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்த நட்பு காதலாக மாறியது. ஐடி ஊழியரான கவின் சென்னையில் வேலை செய்து வந்தார்.

சுர்ஜித்தை கைது செய்த போலீஸ்

இந்த நிலையில் விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு கடந்த ஜூலை 27 ஆம் தேதி கவின் வந்திருந்தார்.

அப்போது சுபாஷினி கவினை நெல்லை பாளையங்கோட்டைக்கு அழைத்துள்ளார். மேலும் தனது தாத்தாவின் உடல்நிலை சரியில்லாததால் அவரை நெல்லை பாளையங்கோட்டைக்கு கவின் அழைத்து வந்திருந்தார்.

அப்போது சுபாஷினியின் தம்பி சுர்ஜித், கவினை பேச வேண்டும் என்று அழைத்துச் சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சுபாஷினியும் கவினும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும், காதலை கைவிடுமாறு கவினிடம் சுர்ஜித் பேசியதாகவும் ஆனால் அவர் கைவிட மறுத்ததால் ஆணவப் படுகொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து சுர்ஜித் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டது.

இதைத்தொடர்ந்து, காவல் உதவி ஆய்வாளர்களான சுர்ஜித்தின் தந்தை சரவணன் மற்றும் தாய் கிருஷ்ணகுமாரி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

சுபாஷினியிடம் 3 மணி நேரம் விசாரணை

மேலும், சுர்ஜித்தின் பெற்றோரினை 2 வது, 3 வது குற்றவாளிகளாக முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டு வழக்கும் சிபிசிஐடி வசம் ஒப்படைகப்பட்டது.

இதையடுத்து சிபிசிஐடி போலீசார் சுர்ஜித் மற்றும் அவரின் தந்தையை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

அதன்பேரில் வரும் 13 ஆம் தேதி வரை சுர்ஜித் மற்றும் அவரின் தந்தை சரவணனை 2 நாள்கள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து அவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று சுபாஷினியிடம் காலையில் 3 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது சுபாஷினி கூறியவற்றை போலீசார் பதிவு செய்துள்ளனர். இதில் பல்வேறு தகவல்கள் வெளிவந்ததாக கூறப்படுகிறது.

மேலும் சுபாஷினி தாயாரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், சுர்ஜித்துக்கு உதவியதாக மற்றொரு நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் ஒருவர் கைது கவின் கொலை வழக்கில் இன்று திடீர் திருப்பமாக சுர்ஜித்தின் ஒன்றுவிட்ட சகோதரர் ஜெயபாலன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கொலைக்கு உதவியாக ஜெயபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெயபாலன் சுர்ஜித்தின் சித்தி மகன் என்று கூறப்படுகிறது.

 

Share.
Leave A Reply

Exit mobile version