உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக பேசுவாரத்தை நடத்த நேற்று ரஷிய அதிபர் புதின் அமெரிக்கா சென்றிருந்தார்.
இந்நிலையில் விமான நிலையத்தில் புதின் தரையிறங்கும் போது ஒரு B2 Bomber குண்டுவீச்சு விமானம் அவர் மீது பறந்தது.
அமெரிக்காவின் இராணுவ வலிமையை ரஷியாவுக்கு காட்ட இந்த விமானம் பறக்கவிடப்பட்டதாக கூறப்படுகிறது. டிரம்ப் புதினை வரவேற்றபோது, குண்டுவீச்சு விமானங்கள் மேலே பறக்கும் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
B2 Bomber பெரிதும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளைத் தாக்கும் திறன் கொண்டவை.அமெரிக்க இராணுவத்தின் ஆயுதக் களஞ்சியத்தில் இருப்பதிலேயே B2B குண்டுவீச்சு விமானங்கள் மிகவும் விலையுயர்ந்த விமானங்கள் ஆகும்.
ஒவ்வொன்றும் 2.1 பில்லியன் டாலர்கள் மதிப்புடையவை. இதில் ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 6,000 கடல் மைல்கள் வரை பறக்க முடியும். B2 Bomber குண்டுவீச்சு விமானங்கள் 18,144 கிலோ எடையை சுமக்கும் திறன் கொண்டவை. அணு குண்டுகளையும் அவற்றால் சுமந்து செல்ல முடியும்.
Trump just flew a B-2 stealth bomber over Putin’s head…
Absolutely incredible. pic.twitter.com/2bsnssRv9f
— Geiger Capital (@Geiger_Capital) August 15, 2025