பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய், திருமணத்துக்கு முன்பு ஒரு நடிகருடன் உறவில் இருந்த போது அவரால் பயங்கரமாக டார்ச்சர் செய்யப்பட்டாராம். அந்த நடிகர் யார் தெரியுமா?

இந்திய திரையுலகில், பெரும் நடிகைகளுள் ஒருவராக இருந்தவர் ஐஸ்வர்யா ராய். இவர், திருமணத்திற்கு முன்பு ஒரு பிரபல நடிகருடன் காதல் உறவில் இருந்தார்.

ஆனால், அந்த நடிகரோ, காதல் என்கிற பெயரில் அவரை பயங்கரமாக டார்ச்சர் செய்திருக்கிறார். அந்த நடிகருக்கு தற்போது 60 வயதாக போகிறது. இந்த வயதிலும் அவர் சிங்கிளாகத்தான் இருக்கிறார். அவர் யார் தெரியுமா?

ஐஸ்வர்யா ராய், 1994ஆம் ஆண்டு, தனது 21வது வயதில் உலக அழகி பட்டம் வென்றார். அறிவு, அழகு, தெளிவு என எதிலும் இவரை அடித்துக்கொள்ள யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. இந்தியாவின் முகமாக, பல நாடுகளில் ஐஸ்வர்யா ராயை பல கோடி பேருக்கு தெரியும்.

இந்திய சினிமா உலகில், யாராலும் தொட முடியாத உச்சத்தில் இருந்த நடிகை, ஐஸ்வர்யா ராய். தமிழில் ஜீன்ஸ் திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமான இவர், தொடர்ந்து ரஜினிகாந்த், ஷாருக்கான் என பல டாப் நடிகர்களுக்கு ஜோடியாக படங்களில் நடித்திருக்கிறார்.


ஐஸ்வர்யா ராய்க்கு, 2007ஆம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சனுடன் திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் குரு, ராவன் உள்ளிட்ட பல படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்துள்ளனர். சில ஆண்டுகள் காதலித்த இவர்கள், பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

ஐஸ்வர்யா ராய், திருமணத்திற்கு முன்பு பிரபல நடிகர் சல்மான் கானுடன் காதல் உறவில் இருந்தார்.ஸ்கிரீனில் இருந்த இவர்களின் கெமிஸ்ட்ரி, பல லட்சம் ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து, இருவரும் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

1990களில் இருந்து, 2000ம் ஆண்டுகள் வரை காதலித்த இவர்கள், ஹம் தில் தே சூக்கே சனம் என்கிற படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். பின்னர் பல படங்களில் ஒன்று சேர்ந்து நடித்தனர்.

சல்மான் கான்-ஐஸ்வர்யா ராயின் உறவு, 2002ல் பிரேக் அப் ஆனதாக கூறப்படுகிறது. இருவரும் திருமணத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவர்கள் பிரிந்தது, பாலிவுட்டை அதிர வைத்தது.

இதன் காரணம் குறித்து பின்னர் ஐஸ்வர்யா ராய் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். தன் அனுமதியின்றி எந்த படத்திலும் நடிக்க கூடாது என்று ஐஸ்வர்யா ராய்க்கு பல நிபந்தனைகளை காதல் உறவில் இருந்த போது சல்மான் கான் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. தன்னை, அவர் துன்புருத்தியதாகவும் ஐஸ்வர்யா ராய் சில பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

சல்மான் கானால் அவதிப்பட்ட ஐஸ்வர்யா ராய், சில நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்ததாகவும், ஒரு நாள் சல்மான் நள்ளிரவில் அவரது வீட்டிற்கு வந்து சண்டையிட்டதாகவும் கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட இவர்களின் காதல் உறவானது, அதிக சண்டைகளுக்கு பிறகு பிரிந்திருக்கிறது. தற்போது சல்மான் கானுக்கு கிட்டத்தட்ட 60 வயதான நிலையில், இன்னும் அவர் சிங்கிளாகத்தான் இருக்கிறார்.

Share.
Leave A Reply

Exit mobile version