யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டடி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் ஏராளமான வெடிபொருட்கள், ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்தத் தனியார் காணியில் வெடிபொருட்கள் அவதானிக்கப்பட்டு, யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, இது தொடர்பாக பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுசென்றுள்ளனர்.

அதன் பின்னர், இன்றைய தினம் (22) வெடிபொருட்களை கண்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டபோது, வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டு வருகிறது.

யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் செயற்படுத்தப்படும் இந்த ஆயுத மீட்புப் பணியில் யாழ்ப்பாண பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், தடயவியல் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version