டிரம்பின் 50% வரிவிதிப்பால் சுமார் 23 ஆயிரம் கோடி அளவிலான கடல் உணவு ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்ட சுமார் 70 கோடி ரூபாய் மதிப்பிலான 500 டன் சரக்குகளை அமெரிக்க இறக்குமதியாளர்கள் திருப்பி அனுப்பி உள்ளனர்.

தமிழகத்தில் அமெரிக்காவுக்கு கடல் உணவுகளை ஏற்றுமதி செய்யும் 25 நிறுவனங்கள் உள்ளன. இதில் தூத்துக்குடியில் மட்டும் 15 நிறுவனங்கள் உள்ளன. ஒரு மாதத்துக்கு இங்கிருந்து சுமார் 20 கண்டெய்னர்களில் கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இது குறித்து இந்திய உணவு ஏற்றுமதியாளர்கள் சங்க தமிழக தலைவர் செல்வின் பிரபு, “இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கடல் உணவு பொருட்களில் 30-40% வரை தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்த விலையேற்றம் காரணமாக அமெரிக்காவில் இந்திய கடல் உணவு பொருட்களை வாங்குவது குறைந்துள்ளது.

ஏற்றுமதியும் 50% வரை குறைந்துவிட்டது. கடல் உணவுகளை நீண்ட நாட்கள் இருப்பு வைக்க முடியாது. இதே நிலை நீடித்தால் கடல் உணவு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும்” என்றார்.

மேலும், “உலகளவில் 35 கோடி மக்கள் தொகை கொண்ட அமெரிக்கா, கடல் உணவு இறக்குமதியில் முக்கிய பங்கு வகிக்கிறது. மற்ற நாடுகள் குறைந்த அளவு மக்கள் தொகை கொண்டுள்ளதால், மற்ற நாடுகளின் மார்க்கெட்டை பிடிக்க தங்களுக்கு வெகு காலம் ஆகும் எனவும் அவர் கூறினார்.

Share.
Leave A Reply

Exit mobile version