நீரிழிவு நோய் தொடர்பான அறிவின் முக்கியத்துவம்
நீரிழிவு நோய் தொடர்பான அறிவின் முக்கியத்துவம் பல்வேறு காரணங்களால் முக்கியமாக கருதப்படுகிறது. நீரிழிவு நோயை முற்றிலுமாகத் தடுக்க முடியாத போதிலும், அதனை ஏற்படுத்தக்கூடிய காரணிகளைக் கண்டறிந்து அவற்றை தவிர்ப் பதன் மூலம் நோய் ஏற்படுவதைத் தடுக்க முடியும்.
உண்ணும் உணவின் சரியான கட்டுப்பாடு, உடற் பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் போன்றவற் றினால் நோயைக் கட்டுப்பாட்டில் பேணமுடியும்.
நீண்ட கால நீரிழிவு நோயானது இதய நோய், குருதியமுக்கம், கண் குருடாதல் மற்றும் கால் விரல்க ளைத் துண்டிக்கப்பட வேண்டிய நிலை போன்ற பலவித பாதகமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.
இவற்றைத் தடுக்கும் வழி முறைகளை முன்கூட்டியே அறிந்து செயற்படுவது மிகவும் அவசிய மாகும். நீரிழிவை எவ்வாறு கட்டுப் பாட்டில் வைத்திருக்கலாம் என்பது பற்றிய அறிவு நோயாளியின் தினசரி வாழ்க்கையை எளிதாக்குவதோடு பலவித தீவிரமான பக்க விளைவு கள் ஏற்படக்கூடிய வாய்ப்பையும் குறைக்க உதவும்.
நீரிழிவு பற்றிய பொதுமக்களின் விழிப்புணர்வு அதிகரிக்க செய்வதன் மூலம் நாடு முழுவதும் அதன் பாதிப் பைக் குறைத்துக் கொள்ளமுடியும்.
இதன் மூலமாக ஒவ்வொரு தனி நபரும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் சமூகத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.
நீரிழிவு நோய் என்றால்? நீரிழிவு நோய் (Diabetes) என் பது உடலிலுள்ள குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்தும் இன்சுலின் (Insulin) ஓமோனின் செயற்பா டுகளில் ஏற்படும் குறைபாடு காரண மாக உருவாகும் ஒரு நிலையாகும்.
இதன் காரணமாக குருதியிலுள்ள குளுக்கோஸின் அளவு வழமைக்கு மாறாக உயர்வடைகிறது. இன்சுலின் பற்றாக்குறை ஆனது உடலில் இன் சுலின் உற்பத்தியில் ஏற்படுகின்ற குறைபாடு காரணமாகவோ அல்லது போதுமான அளவில் இன்சுலின் உற் பத்தி செய்யப்பட்ட போதிலும் அது சரியாக செயற்படாத நிலையினாலே இந்நோய் ஏற்படலாம்.
இன்சுலின் ஆனது எமது உட லில் சதையியினால் உற்பத்தி செய்யப்படுகின்றது.
இன்சுலின் குருதியிலுள்ள குளுக்கோசினை கலங்களுக்கு எரிபொருளாக மாற்ற உதவுகிறது. இன்சுலின் இல்லையெனில் குளுக்கோசு குருதியில் தேங்கிவிடும், இதனால் குருதியில் குளுக்கோசின் அளவு வழமையை விட அதிகரிக்கும்.
நீரிழிவு நோயின் அறிகுறிகள்
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட் டவர்களில் பல்வேறு அறிகுறிகள் காணப்படலாம். பொதுவாக அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம், வழக்கத்திற்கு மாறாக அதிகளவிலான தாகம் ஏற்படுவது போன்றவை ஆரம்பகட்ட நிலை நோயறிகுறிகளாகக் காணப்படும்.
நீரிழிவு நோய் காரணமாக உடல் சோர்வு, உடல் பலவீனம் மற்றும் காரணமின்றி உடல் எடை குறைவது போன்றவையும் நிகழக்கூடும்.
நீரிழிவு நோயால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் ஏற்படும் வாய்ப்புள்ளது. ஏனெனில் மேலதிக மாக குருதியிலுள்ள குளுக்கோசை சிறுநீர் மூலமாக எமது உடல் வெளியேற்ற முயற்சிக்கிறது.
இதன் விளைவாக தாகம் ஏற்படுவது அதி கரிப்பதோடு மேலும் உடல்சோர்வு மற்றும் பலவீனம் ஏற்படுவதோடு உடல் பருமன் சிலருக்கு கணிசமா கக் குறை யும் வாய்ப்புள்ளது.
நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளவர்கள் யார் ?
நீரிழிவு நோய் என்பது ஒரு பொது சுகாதார பிரச்சினையாக மாறியுள்ள தோடு, இது வயோதிபர்களை மட்டுமல்லாமல் இளம்வயதினரையும் இன்று அதிகளவில் தாக் குகின்றது. இளம் வயதின ரிடம் இந்நோய் அதிகரிக்க முக்கிய காரணியாகக் காணப்படும் அம்சங்கள் பல உள்ளன.
உதாரணமாக, அதிக சர்க்கரை மற்றும் காபோ ஹைதரேட்டு கொண்ட உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சியின்மை, மற்றும் அதிக நேரம் தொலைபேசி அல்லது கணினி முன் அமர்ந்து செலவிடுதல் போன்ற செயல்கள் இளைஞர்களின் உடல் ஆரோக்கியத்தைக் குறைக்கின்றன.
உடற்பருமன் மற்றும் ஒழுங்கற்ற உடல் இயக்கமும் இளம் வயதின ருக்கு நீரிழிவு நோயை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளாக உள்ளன.
அத்துடன், அதிக மனஅழுத்தம், நவீன வாழ்க்கைமுறை மாற்றங்கள் மற்றும் நகர வாழ்க்கைமுறை போன்ற காரணிகளும் இளைஞர்களின் நீரிழிவு நோய் ஆபத்தை அதி கரிக்க செய்கின்றன. தூக்கமின்ம மிதமிஞ்சிய வேலைப்பளு போன்றவை இளமையி லேயே நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கின்றன.
மரபணு பாதிப்புகளும் இங்கு முக்கிய பங்காற்றுகின்றன. குடும்பத்தில் ஒரு முன்னாள் உறுப்பினர் நீரிழிவு நோயால் பாதிக்கப் பட்டிருந்தால், அது இளவயதினருக்கும் தொடர்ச்சியாக ஏற்ப டுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
இதனால், இளமையி லேயே ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளவும், ஒழுங்கான உடற்பயிற்சியை தொடரவும், மன அழுத்தத் தைக் குறைத்து, நேரத்துக்கு சரியாக உணவை எடுப்ப துடன் போதுமான தூக்கத் தையும் உறுதிப்படுத்தல் செய்ய வேண்டும். இவை எல்லாம் நீரிழிவு நோயின் தாக்கத்தை குறைக் கவும், வாழ்நாளை ஆரோக்கியமாக் கவும் உதவும்.
நீரிழிவு நோயினால் உடலில் நேரடியாக சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. குருதிக் குளுக்கோசின் அளவு அதிகரிப்பதன் காரணமாக உடலில் உள்ள காயங்கள் சரியாகுவதில் சிரமம் ஏற்படும்.
மேலும் கால்கள் அல்லது கைகளில்சுளுக்கு இதுபோன்ற அசௌகரிய நிலைகள் ஏற்படலாம். இது நீரிழிவால் ஏற்படும் நரம்புப் பிரச்சினைகளின் வெளிப்பாடாகும்.
நீரிழிவால் கண்ணிலுள்ள Retina பாதிக்கப்படுவதால் பார்வைக்கு றைபாடு ஏற்படலாம். நீரிழிவு கார ணமாக தோலில் மாற்றங்கள் ஏற்ப டுவதுடன் கறுப்பு தளும்பு போன்ற அமைப்புகள் தோலில் ஏற்படும்.
இந்த நோயறிகுறிகள் வகை 1 நீரி ழிவு மற்றும் வகை 2 நீரிழிவு ஆகிய இரண்டிலும் பொதுவாகக் காணப்படும். நீரிழிவை சரி யாக கட்டுப்படுத்த தவ றினால் இதயம், மூளை, சிறுநீரகம் போன்ற முக் கிய உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே இவ்வா றான நோயறிகுறிகள் ஏற்ப டுகின்ற போது உடனடியாக மருத்துவர் ஒருவரை அணு தேவையான பரிசோதனை களை செய்துகொள்வதுடன் சிகிச்சைகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
நீரிழிவு நோயின் வகைகள்
வகை 1 நீரிழிவு மற்றும் வகை 2 நீரிழிவு என்பன இரு முக்கியமான நீரிழிவு நோயின் வகைகள் ஆகும், ஆனால் அவை உருவாகின்ற காரணங்கள், அவற்றின் நோயறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் என்பன வேறுபடுகின்றன.
வகை 1 நீரிழிவு என்பது உடலில் இன்சுலினை உற்பத்தி செய்யும் சதையி செயலிழப்பதனால் நடைபெறும் ஒரு பாதிப்பு ஆகும்.
இதன் காரணமாக, குருதியிலுள்ள குளுக்கோசு கலங்களினால் உபயோகப்படுத்த முடியாது, அதனால் குருதியில் குளுக்கோசின் அளவு அதிகரிக்கின்றது.
இது பொதுவாக சிறுவர்களிலும் இளைய வர்களிலும் காணப்படும். இதற்கான ஒரே சிகிச்சை முறை இன்சுலினை குருதியினுள் செலுத்துவது ஆகும்.
வகை 2 நீரிழிவு என்பது பொதுவாக வயதானவர் களுக்கு ஏற்படும் ஒரு நிலையாகும். இதில் எமது உடல் இன்சுலினை உற்பத்தி செய்தாலும், அது சரியாக செயற்படாமல் போகின்றது (insulin resistance).
இதன் விளைவாக சர்க்கரையின் அளவு அதிகரித்து உடல் பலவீன மாகிறது.
வகை 2 நீரிழிவு ஆனது உடற்பயிற்சி குறைவு மற்றும் தவறான உணவு பழக்கங்கள், வாழ்க்கை முறைகள் காரணமாக ஏற்படுகிறது.
இந்த வகை நீரிழிவானது இன்சுலின் அல்லது வாழ்க்கை முறைகளில் மாற்றம் ஏற்படுத்துவதன் மூலமும், ஏனைய மருந்துகள் மூலமாகவும் சிகிச்சைய ளிக்கப்படுகிறது.
மேலே குறிப்பிடப் பட்டுள்ள இரு வகையான நீரிழிவு நோய்களும் சரியான பராமரிப்பு மற்றும் சிகிச்சையின் மூலம் கட்டுப் படுத்தப்படலாம்.
Dr.செல்லத்துரை பிரசாத் பொது வைத்திய நிபுணர்.
இவற்றையும் படியுங்கள்