தமிழ் சினிமா பெருமையாக கொண்டாடும் இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் ஏ.ஆர்.ரகுமான்.

1992ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இப்போது இந்திய சினிமாவை தாண்டி உலகளவில் கவனிக்கப்படும் இசையமைப்பாளராக வலம் வருகிறார்.

எப்போதும் அவரைப் பற்றி சினிமா செய்திகள் தான் வெளியாகும் ஆனால் கடந்த வருடம் தனது மனைவியை விவாகரத்து செய்த செய்தியை வெளியிட்டார்.

ஏ.ஆர்.ரகுமான்-சாயிரா பானு தம்பதிக்கு கதீஜா, ரஹீமா என 2 மகள்களும் ஏஆர் அமீன் என்ற மகனும் உள்ளனர்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் ஏ.ஆர்.ரகுமான் பேசும்போது, நான் சின்ன வயதில் இருக்கும்போதே என் அப்பா மறைஞ்சுட்டாறு, அப்பறம் என்ன பாத்துகிட்ட என் பாட்டியும் மறைஞ்சுட்டாங்க.

நான் ஆசை ஆசையா வளர்ந்த நாய் குட்டியும் மறைஞ்சுடுச்சு, நான் நேசித்த எதுவும் இப்போது இல்லை. என் மனைவியும் என்னோடு இல்லை, வாழ்க்கையில் எதுவும் நிலையானது இல்லை சின்ன வயசுலையே புரிஞ்சுகிட்டேன் என பேசியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version