மணல் ஏற்றிச் சென்ற லொறி ஒன்று ரன்ன நகருக்கு அருகில், வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லொறியின் ஓட்டுநர் உயிரிழந்ததாக ஹூங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தங்காலை – ஹம்பாந்தோட்டை பிரதான வீதியில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. புத்தலயிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த லொறியொன்றே இவ்வாறு புதன்கிழமை (03) காலை விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது.

லொறியை நீண்ட நேரம் செலுத்திய நிலையில் ஓட்டுநருக்கு ஏற்பட்ட தூக்க கலக்கத்தால் இவ் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விபத்தில் உயிரிழந்தவர் அக்குறுகொட, சுல்தானா கொட பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய மஹகமகே இந்திக என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும் விபத்து தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version