மட்டக்களப்பு, ஏறா வூர் பொலிஸ் பிரிவுக் குட்பட்ட வந்தாறு மூலை இடம்பெற்ற ரயில் விபத்தில் இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழந் துள்ளார்.

உயிரிழந்தவர் தொழில் நிமிர்ந்தம் மோட் டார் சைக்கிளில் களுவன் கேணி வீதியிலுள்ள ரயில் கடவையை நேற்று செவ் வாய்க்கிழமை காலை கடக்க முற்பட்ட வேளையில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற் றுள்ளது.

குறித்த ரயில் கடவை யில் இரண்டு நாட்களாக பணியாளர் இல்லாததால், இந்த விபத்து நிகழ்ந்ததாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த இழப்பு மிகவும் வேத னையானது எனவும் எதிர்கா லத்தில் இதுபோன்ற சம்பவங் கள் நிகழாமல் இருக்க, உட னடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலி ஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version