கொழும்பில் இருந்து மாரகம பிரதேசத்துக்கு தனியார் பஸ்வண்டியில் பொலிஸ் பொறுப்பதிகாரி என பணம் கொடுக்காமல் பிரயாணித்து, பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் பரிசோதகரான போலி பொலிஸ் அதிகாரி ஒருவரை புதன்கிழமை (03) மாரகம பொலிசார் கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது பற்றி தெரியவருவதாவது;

கொழும்பில் இருந்து மாரகம பிரதேசத்துக்கு பிரயாணித்த தனியார் பஸ்வண்டியில் பிரயாணித்த ஒருவரிடம் நடத்துன்ர் ரிக்கட் பிரயாணிப்பதற்காக கட்டணத்தை கேட்டபோது அவர் தான் மாரகம பொலிஜ் நிலைய பொறுப்பதிகாரி கட்டணம் தரமுடியாது என தெரிவித்து பிரயாணத்தை தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில் பஸ்வண்டி மாரகமவைச் சென்று நிறுத்தப்பட்டதும் அவர் அதில் இருந்து இறங்கிய போது அவரை பஸ்வண்டி நடத்துனர் பின் தொடர்ந்தபோது அவர் பொலிஸ் நிலையத்துக்குள் உள்நுழைவதை கண்டு அங்கு சென்ற போது பொலிஸ் நிலையத்தின் உண்மையான வேறு ஒரு  பொறுப்பதிகாரி ஒருவர் சீருடையில் இருப்பதை கண்டு நடத்துனர் திகைப்படைந்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் நடந்ததை தெரிவித்த தையடுத்து பொலிஸ் பொறுப்பதிகாரி என போலியாக செயல்பட்ட குறித்த நபரை பொலிசார் கைது செய்து விசாரணையில் அவர் கடந்த காலத்தில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையம் ஒன்றில் கடமையாற்றி வந்துள்ள ஜீவந்த என்பவரான இவர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்பரிசோதகர் என கண்டறிந்தனர்.

இதனை தொடர்ந்து போலியாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என மோசடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட  முன்னாள் பொலிஸ் அதிகாரியை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version