சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று சனிக்கிழமை (13) காலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் கல்முனை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய வர்த்தகர் ஒருவர் ஆவார்.

இவர் குவைத்திலிருந்து அதிகாலை 4.40 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, பயணப்பொதியிலிருந்து “மான்செஸ்டர்” ரக 23 ஆயிரம் வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 115 சிகரட்டு காட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

3.45 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டு சிகரட்டுகளே கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version