கேட்டல் குறைபாடுடைய இரண்டு கனடிய பணெ்கள் ரயிலில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மொன்ரியாலைச் சேர்ந்த இரண்டு பெண்கள் போர்த்துகல் நாட்டில் இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் குய்லெய்ன் புலாங்கர் (62) மற்றும் எலிச் பெனார்ட் (66) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

போர்ட்டோவிற்கு கிழக்கே 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மெசாவ் ஃப்ரியோ பகேயிரோஸ் ரயில் நிலையம் அருகே நதிக்கரையில் புகைப்படம் எடுத்து கொண்டிருந்தபோது ரயில் மோதியதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரயில் ஓட்டுநர் ஹார்ன் அடித்து, பிரேக் போட்டாலும், நேரத்தில் நிறுத்த முடியாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த இருவருடன் இருந்த மற்ற இருவர் காயமின்றி உயிர் தப்பியுள்ளனர்.

சம்பவத்தில் இரண்டு கனடியர்கள் உயிரிழந்ததை கனடிய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளதுடன், குடும்பத்தினருக்கு தேவையான தூதரக உதவிகள் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

இது போர்த்துகலில் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் உயிரிழக்கும் இரண்டாவது சம்பவமாகும்.

இதற்கு முன் இந்த மாதம், லிஸ்பனில் நடந்த புனிகுலர் தடம் புரண்ட விபத்தில் கியூபெக் மாநிலத்தைச் சேர்ந்த ஆண்ட்ரே பெர்ஜெரான் மற்றும் அவரது மனைவி பிளாண்டின் டாக்ஸ் உயிரிழந்திருந்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version