கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணை தொடர்பில் மற்றுமொரு நபரொருவர் காணொளியொன்றினை வெளியிட்டுள்ளார். குறித்த காணொளியை அவர் தனது உத்தியோகப்பூர்வ யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “சில யூடியூப் தளங்களில் மிகவும் அபாண்டமான சில குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

நான் பலதடவைகள் இங்கு வந்துள்ள நிலையில், வெளியில் ஒப்பிட்டளவில் இங்கு சில பொருட்களின் விலைகள் மிகவும் மலிவாகவே உள்ளது.

உதவா விடினும் பரவாயில்லை வெளியில் தவறான விடயங்களை கொண்டு செல்லாதீர்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை தொடர்பில் சூழலியலாளர் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட நபரொருவர் அண்மையில் காணொளியொன்றை முகப்புத்தகத்தில் வெளியிட்டு இருந்தார்.

குறித்த காணொளியில் அவர் தனது பிள்ளைகள் உணவு பொருட்களுடன் செல்ல றீ(ச்)ஷாவிற்குள் தங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

இது தொடர்பில் றீ(ச்)ஷா நிறுவனத்தின் உரிமையாளர் கந்தையா பாஸ்கரன் தனது தரப்பு கருத்தை வெளியிட்டிருந்தார்.

அதில் நிறுவனத்தின் கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் குறித்தும் மக்கள் கடைபிடிக்க வேண்டிய பொதுவான முக்கிய சட்டத்திட்டங்கள் குறித்தும் அவர் தெளிவாக பதிலளித்திருந்தார்.

இந்தநிலையில், தற்போது மற்றுமொரு நபர் அவர் தரப்பிலான கருத்துக்களை காணொளியில் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version