கந்தளாய், பேராறு பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று நாயுடன் மோதியதில் சாரதி பலத்த காயங்களுடன் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கந்தளாய் பேராறு பகுதியிலிருந்து நேற்று (22.09.2025) வெலிங்டன் சந்திக்கு பயணித்த முச்சக்கரவண்டி, இலாஹியா பள்ளிவாசல் முன்பாக வீதியைக் கடந்த நாய் ஒன்றுடன் மோதியுள்ளது.

இந்த விபத்தில் நாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.

முச்சக்கரவண்டியின் சாரதி பலத்த காயமடைந்துள்ளார்.

உடனடியாகவே, அவசர சேவைக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, அவர் கந்தளாய் வைத்தியசாலையின் விபத்து அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து குறித்து கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version