23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியில் இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். மாதா கோவில் வீதி, உடுவில், சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணுராஜ் யதுர்மன் (வயது 21) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த இளைஞன் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை ஆடைகளை மினுக்கிக் (iron) கொண்டிருந்தார். இதன்போது மின் இணைப்பில் இருந்த கோளாறு காரணமாக மின்சாரம் அவர் மீது தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
பின்னர் அவரது சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டாடர். சாட்சிகளை சுன்னாகம் பொலிஸார் நெறிப்படுத்தினர்.