திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள இளக்கந்தை பகுதியில் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள நிலையில் இன்று (24) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டு திடீர் மரண விசாரணை அதிகாரி யூசூப் லாபிர் விசாரணை மேற்கொண்ட பின்னர் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் பாட்டாளிபுரம், இளக்கந்தை பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்ணாவார்.

குறித்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இடத்தை மூதூர் திடீர் மரண விசாரணை அதிகாரி, சம்பூர் பொலிஸார் ஆகியோர் நேரடியாகச் சென்று பார்வையிட்டு ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.

குறித்த பெண்ணின் உயிரிழப்புக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மூன்னெடுத்து வருகின்றனர்.

 

Share.
Leave A Reply

Exit mobile version