மாத்தறை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் 04 ரி-56 ரக துப்பாக்கிகள், ஒரு மெகசின், 27 தோட்டாக்கள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் ஆகியவற்றுடன்  சந்தேக நபரொருவரும் அவருக்கு உதவிய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொலொஸ்கொட  – இப்பாவல பகுதியில், புதன்கிழமை ( செப்டெம்பர் 24) மாலை குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இவர்களிடமிருந்து 8 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் 38 வயதான இப்பாவெல, வெலிகம பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவருக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் 37 வயதான இப்பாவெல, வெலிகம பகுதியைச் சேர்ந்த பெண்ணும் விசாரணைகளுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைக்காக வெலிகம பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version