யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இளம் தாயொருவர் நேற்றையதினம் (26) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவத்தில் உடுவில் மேற்கு பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் 29 வயதுடைய தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த மே மாதம் 19ஆம் திகதி வயிற்றில் சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்ட போது அவருக்கு வயிற்றில் ஒரு குழாய் வைக்கப்பட்டது.

அந்த குழாயினை அகற்றுவதற்காக கடந்த 24ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்ட நிலையில், நேற்றையதினம் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் சத்திர சிகிச்சை நிறைவில், அதிக இரத்த போக்கு காரணமாக குறித்த பெண் உயிரிழந்தார்.

அதேவேளை  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த தாயாரும் நேற்று (26) உயிரிழந்துள்ள சம்பவமும் பதிவாகியுள்ளது.

இந்நிலையில்  இத்தனை உயிரிழப்புக்களும்  மருத்துவ தவறுகளால் நிகழ்கின்றனவா என சமூக ஆச்வர்கள் கேள்வி எழுப்பியுள்ளதுடன்,  விசனங்களையும்  வெளியிட்டுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version