தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுன ஆராச்சி அவருக்கோ அவர் குடும்பத்துக்கோ எதுவித சொத்துக்களும் இல்லையென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற செயலகம் மற்றும் இலஞ்சம், ஊழல் தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு என்பவற்றுக்கு அவர் வழங்கிய சொத்து விபரத்தில் இந்த விடயம் வெளிவந்துள்ளது.

அவர் சமர்ப்பித்துள்ள விபரங்களின் பிரகாரம் அவருக்கோ அவரது மனைவிக்கோ வீடு, சேமிப்புப் பணம், வைப்புகள், டிஜிட்டல் பணம் என்று எதுவுமே இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

லக்ஷ்மண் நிபுணஆரச்சி மாகாண சபை உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் நீண்ட அரசியல் செயற்பாட்டைக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version