பாதாள உலகத் தலைவர் கெஹல்பத்தர பத்மே மற்றும் பிற பாதாள உலக தலைவர்களுக்கு இந்தோனேசியா சுற்றிவளைப்பு தொடர்பில்  தகவல் தெரிவித்ததாகக் கூறப்படும் பொலிஸ் அதிகாரியை கைது செய்ய விரிவான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் ரோஹன் ஒலுகலா இந்தோனேசியாவிற்கு வந்திருப்பதாகத் தகவல் தெரிவித்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்தே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பொலிஸ் தரப்புக்குள் இருந்து கொண்டு இவ்வாறான சட்டவிரோத செயலில் ஈடுபட்ட குறித்த அதிகாரிக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று  பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

துபாயில் இருக்கும் பாதாள உலகக் கும்பல் தலைவரான தரூன் என்பவருக்கு , “உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்கள் ரோஹன் ஒலுகல மற்றும் மகிந்த ஜெயசுந்தர ஆகியோர் தன்னைக் கைது செய்ய இந்தோனேசியாவுக்கு வந்துள்ளதாக ஒரு மூத்த பொலிஸ் அதிகாரி தகவல் அளித்தாக  தெரிவித்துள்ளார்.

இதன்படி தருன் என்பவர் கெஹல்பத்தர குழுவின் முக்கிய நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த இரண்டு உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்கள் இந்தோனேசியாவிற்கு சென்றதாக தகவல் கிடைத்தவுடன்,  தரூன் என்பவர் மூலம் கெஹல்பத்தர பத்மே மற்றும் பிற பாதாள உலக தலைவருக்கு தகவல் வழங்கியுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் தாங்கள் தங்கியிருந்த சொகுசு குடியிருப்பை கைவிட்டு வேறு குடியிருப்பிற்கு தப்பிச் செல்ல முயற்சித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இதன்படி பொலிஸ் தரப்புக்கு கிடைத்த இந்த இரகசிய தகவலின் காரணமாக, இந்த பாதாள உலக தரப்புக்கள் ஏதாவது ஒரு வழியில் கைது செய்யப்படாவிட்டால் அது மிகப்பெரிய இழப்பாக இருக்கும் என்றும் பொலிஸ் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கெஹல்பத்தர பத்மேவுக்கு எதிராக இன்டர்போல் மூலம் பிறப்பிக்கப்பட்ட சிவப்பு பிடியானை அறிக்கை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், குறித்த குற்றச்செயலில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி கெஹல்பத்தர பத்மேவின் வாட்ஸ்அப் என்னுக்கு தொடர்புடைய சிவப்பு பிடியாணை நகலை அனுப்பியிருப்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version