பிரான்ஸின் முன்னாள் ஜனா­தி­பதி நிகோலஸ் சார்­கோ­ஸ் மீதான கிரி­மினல் குற்­றச்­சாட்டு தொடர்பில் அந்­நாட்டு நீதி­மன்றம் 5 வருட சிறைத்­தண்­டனை விதித்­துள்­ளது.

இத்­தீர்ப்­புக்கு எதி­ராக சார்­கோஸி மேன்­மு­றை­யீடு செய்­தாலும் அது தொடர்­பான தீர்ப்பு வரும்­வரை அவர் சிறையில் அடைக்­கப்­பட வேண்டும் எனவும் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

தற்­போது 70 வய­தான நிக்­கலஸ் சார்­கோஸி, 2007 முதல் 2012 ஆம் ஆண்­டு­வரை பிரான்ஸின் ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்­தவர்.

சார்­கோ­ஸிக்கு 100,000 யூரோ (சுமார் 3.35 கோடி இலங்கை ரூபா) அப­ரா­தமும் விதிக்­கப்­பட்­டுள்­ள­துடன், அவர் அரச பத­வி­களை வகிப்­ப­தற்கும் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால், ஊழல் மற்றும் தேர்தல் பிர­சா­ரத்­துக்கு சட்­ட­வி­ரோத நிதி பெற்­றமை ஆகிய குற்­றச்­சாட்­டு­க­ளி­லி­ருந்து அவர் விடு­விக்­கப்­பட்­டுள்ளார்.

சார்­கோ­ஸியின் 5 வருட சிறை­வாசம் எப்­போது ஆரம்­ப­மாகும் என்­பது குறித்து எதிர்­வரும் 13 ஆம் திகதி வழக்­குத்­தொ­டு­நர்­களால் அவ­ருக்கு அறி­விக்­க­ப்படும். எவ்­வா­றெ­னினும் பெப்­ர­வரி 13 ஆம் திக­திக்கு முன்னர் அவரின் சிறை­வாசம் ஆரம்­ப­மாக வேண்டும்.

2 ஆம் உலக யுத்­தத்தின் பின்னர் பிரான்ஸில் அரச தலை­வ­ராக பதவி வகித்த ஒருவர் சிறை­வாசம் அனு­ப­விக்­க­வுள்­ளமை இதுவே முதல் தட­வை­யாகும்.

இரண்டாம் உலக யுத்த காலத்தில் நாஸிப்­ப­டை­களின் ஆக்­கி­ரமிப்புக்கு உட்­பட்­டி­ருந்த ஜேர்­ம­னியில் நாஸி­களின் ஆத­ர­வுடன் பிர­த­ம­ராக பதவி வகித்த பிலிப்பே பேடெய்­ன் யுத்­தத்தின் பின்னர் தேசத்­து­ரோக குற்­றச்­சாட்டில்சிறையில் அடைக்கப்ப அவ­ருக்கு பின்னர் சிறை­யி­ல­டைக்­கப்­படும் முதல் முன்னாள் பிரெஞ்சு அரசு தலைவர் நிகோலஸ் சார்­கோஸி ஆவார்.

சார்­கோ­ஸிக்கு முன் 1995 முதல் 2007 மே மாதம் வரை பிரான்ஸின் ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்­த­வரும் சார்­கோஸின் அர­சியல் குரு­வு­மான ஜக் சிராக், பாரிஸ் நகர மேய­ராக பதவி வகித்­த­போது, நிதி துஷ்­பி­ர­யோகம் செய்­தமை தொடர்­பான வழக்கில் 2011 ஆம் ஆண்டில் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்டார். அவ­ருக்கு இரண்டு வரு­ட ­கால ஒத்­தி­வைக்­கப்­பட்ட சிறைத்­தண்­ட­னையே விதிக்­கப்­பட்­டதால் ஜக் சிராக் சிறை செல்­ல­வில்லை.

ஜனா­தி­ப­தி­யா­கு­வ­தற்கு முன்

நிகோலஸ் சார்­கோஸி பிரெஞ்சு ஜனா­தி­ப­தி­யாக தெரி­வா­கு­வ­தற்கு முன்னர், 2005 மே முதல் 2007 மார்ச் வரை பிரான்ஸின் உள்­துறை அமைச்­ச­ராக பதவி வகித்தார்.

லிபி­யாவின் அப்­போ­தைய அதிபர் கேணல் முவம்மர் கடா­பியின் ஆட்­சிக்கு உள்­நாட்­டிலும் சர்­வ­தேச ரீதி­யா­கவும் எதிர்ப்­புகள் எழுந்­தி­ருந்த நிலையில், சர்­வ­தேச அரங்­கு­களில் தனது அந்­தஸ்தைப் பயன்­ப­டுத்தி கடா­பிக்கு ஆத­ர­வாக பிர­சாரம் செய்­வ­தற்கும், அதற்கு பதி­லீ­டாக தனது ஜனா­தி­பதி தேர்தல் பிர­சா­ரத்­துக்கு கடா­பி­யி­ட­மி­ருந்து பணம் பெறு­வ­தற்கும் 2005 ஆம் ஆண்டில் கடா­பி­யுடன் நிகோலஸ் சார்­கோஸி ஒப்பந்தம் செய்­து­கொண்­டி­ருந்தார் என பிரெஞ்சு விசா­ரணை அதி­கா­ரி­களால் குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்­தது. இது தொடர்பில் சார்­கோ­ஸியின் உத­வி­யா­ளர்கள் மீதும் குற்றம் சுமத்­தப்­பட்­டது.

கடா­பி­யுடன் ஒப்­பந்தம்

1969 ஆம் ஆண்டு முதல் லிபி­யாவை கேணல் முவம்மர் கடாபி ஆட்சி செய்தார். 2011 ஆம் ஆண்டு கிளர்ச்­சியின் மூலம் அவரின் ஆட்சி கவிழ்க்­கப்­பட்­டது. கிளர்ச்­சி­யா­ளர்­களால் கடாபி அடித்துக் கொலை செய்­யப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

நிகோலஸ் சார்­கோ­ஸிக்கு நெருக்­க­மான குளோட் குவேன்ட் மற்றும் பிரைஸ் ஹோர்ட்பெக்ஸ் ஆகி­யோரும் இவ்­வ­ழக்கில் குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

குவென்ட் மற்றும் ஹோர்ட்பெக்ஸ் ஆகியோர் 2005 ஆம் ஆண்டில், கேணல் கடா­பியின் மைத்­து­ன­ரான அப்­துல்லா அல் செனோ­சியை இர­க­சி­ய­மாக சந்­தித்­தனர் என நீதி­மன்றம் தெரி­வித்­தது. 1988 ஆம் ஆண்டில் 270 பேர் உயி­ரி­ழந்த லொக்­கர்பீ விமான குண்­டுத்­தாக்­கு­தலின் சூத்­தி­ர­தாரி என குற்றம் சுமத்­தப்­பட்­டவர் அப்துல் அல் செனோசி.

‘பான் எம்’ விமான அனர்த்தம்

1988 டிசெம்பர் 21 ஆம் திகதி அமெ­ரிக்­காவின் ‘பான் எம்’ நிறு­வ­னத்தின் பய­ணிகள் விமா­ன­மொன்று, ஜேர்­ம­னியின் பிராங்பர்ட் நக­ரி­லி­ருந்து அமெ­ரிக்­காவின் டெட்­ரோயிட் நக­ருக்கு சென்­று­கொண்­டி­ருந்த வேளையில், ஸ்கொட்­லாந்தின் லொக்­கர்பீ நக­ருக்கு மேலாக பறந்­து­கொண்­டி­ருந்­த­போது குண்­டு­வெ­டிப்­பினால் வெடித்துச் சித­றி­யது.

இதனால், அவ்­வி­மா­னத்­தி­லி­ருந்த 259 பேரும் தரை­யி­லி­ருந்த 11 பேரு­மாக 270 பேர் கொல்­லப்­பட்­டனர். அந்த குண்­டுத்­தாக்­கு­த­லுக்கு லிபியா மீது குற்றம் சுமத்­தப்­பட்­டது.

லிபியா அதை பல வரு­டங்­க­ளாக மறுத்து வந்த நிலையில், அத்­தாக்­கு­த­லுக்கு லிபியா பொறுப்­பேற்­ப­தாக 2003 ஆம் ஆண்டு கேணல் கடாபி ஒப்­புக்­கொண்­ட­துடன், பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் குடும்­பங்­க­ளுக்­காக ஒரு பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­க­ளுக்கும் அதி­க­மான பணத்­தையும் செலுத்­தினார். எனினும், தான் தனிப்­பட்ட ரீதியில் இத்­தாக்­கு­த­லுக்கு உத்­த­ர­வி­ட­வில்லை என அவர் கூறி­வந்தார்.

உத­வி­யா­ளர்­க­ளுக்கும் தண்­டனை

இத்­தாக்­கு­தலின் சூத்­தி­ர­தாரி எனக் கரு­தப்­பட்ட கடா­பியின் மைத்­துனர் அப்­துல்லா அல் செனோ­சியை இர­க­சி­ய­மாக சந்­தித்­தாக குற்றம் சுமத்­தப்­பட்ட குளோட் குவேன்ட், சார்­கோஸி ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்த வேளையில் ஜனா­தி­பதி மாளி­கையின் செய­லாளர் நாய­க­மா­கவும், பிரைஸ் ஹோர்ட்பெக்ஸ் உள்­துறை அமைச்­ச­ரா­கவும் பதவி வகித்­தனர்.

அவர்கள் மீதான குற்­றச்­சாட்டை விசா­ரித்த, பரிஸ் நீதி­மன்றம். 80 வய­தான குளோட் குவென்ட்­டுக்கு 6 வருட சிறைத்­தண்­டனை விதித்­தது. ஆனால், உடல்­நி­லைமை கார­ண­மாக அவர் உட­ன­டி­யாக சிறைக்கு அனுப்­பப்­ப­ட­வில்லை. 67 வய­தான ஹோர்ட்­பெக்­ஸுக்கு 2 வருட கால சிறைத்­தண்­ட­னையும் விதிக்­கப்­பட்­டது. ஆனால், அவர் கண்­கா­ணிப்பு சாதனம் அணிந்த நிலையில், சிறைக்கு வெளியே இருக்­கலாம்.

அப்­துல்லா அல் செ­னோ­சி­யு­ட­னான தொடர்­பு­களை ஊழல் ஒப்­பந்தம் என மூன்று நீதி­ப­திகள் அடங்­கிய பரிஸ் குற்­ற­வியல் நீதி­மன்றம் வர்­ணித்­தது.

நிதி உத­வி­களைப் பெறு­வ­தற்கு அல்­லது நிதி உத­வியை பெறு­வ­தற்கு முயற்சி செய்­வ­தற்­காக லிபிய அதி­கா­ரி­களை அணு­கு­வ­தற்கு தனது உத­வி­யா­ளர்­களை முன்னாள் ஜனா­தி­பதி சார்­கோஸி அனு­ம­தித்தார் என நீதி­ப­திகள் தெரி­வித்­தனர். எனினும், சார்­கோ­ஸியின் தேர்தல் பிர­சா­ரத்­துக்கு அப்­பணம் சென்­ற­டைந்­ததா என்­பதை நிரூ­பிப்­ப­தற்கு ஆத­ர­மில்லை என நீதி­ப­திகள் தெரி­வித்­தனர்.

ஆனால், பணம் செலுத்­தப்­ப­டா­விட்­டாலும் அல்­லது செலுத்­தப்­பட்­டதை நிரூ­பிக்க முடி­யா­விட்­டா­லும்­ கூட ஊழல் ஒப்­பந்­த­மொன்று பிரெஞ்சு சட்டத்தின்­படி குற்­ற­மாகும் என நீதி­ப­திகள் தெரி­வித்­தனர். இதன்­ப­டியே சார்­கோ­ஸிக்கு 5 வருட சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

அதே­வேளை, மேற்­படி மோசடித் திட்­டத்தில் சம்­பந்­தப்­பட்­ட­தாக குற்­றம் சு­மத்­தப்­பட்ட அலெக்­ஸாண்ட்ரே ஜோஹ்ரி என்­ப­வ­ருக்கு 6 வருட கால சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டதுடன் அவரை உட­ன­டி­யாக கைது செய்­யு­மாறு நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது.

தொடரும் செல்­வாக்கு

2012 ஆம் ஆண்டில் தனது இரண்­டா­வது தவ­ணைக்­காக ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட்ட நிகோலஸ் சார்­கோஸி, பிரான்­சுவா ஹொலண்­டே­விடம் தோல்­வி­ய­டைந்தார்.

எனினும், பாட­கியும் மொட­லு­மான கார்லா புரூ­ணியை திரு­மணம் செய்த சார்­கோஸி, அர­சியல் வட்­டா­ரங்­க­ளிலும் பொழு­து­போக்கு வட்­டா­ரங்­க­ளிலும் இன்னும் செல்­வாக்கு மிக்­க­வ­ராக விளங்­கு­கிறார்.

தீர்ப்பின் பின்னர் நீதிமன்றத்துக்கு வெளியே செய்­தி­யா­ளர்­க­ளிடம் சார்­கோஸி கருத்துத் தெரி­விக்­கையில், இத்­தீர்ப்­பா­னது சட்­டத்தின் ஆட்­சிக்கு பார­தூ­ர­மான பாதிப்பை ஏற்­ப­டுத்­து­வாக கூறி­ய­துடன், அதற்கு எதி­ராக தான் மேன்­மு­றை­யீடு செய்­வ­தாகத் தெரி­வித்தார்.

சார்­கோஸி மீது குற்றம் சுமத்­தி­ய­வர்­களில் பிர­தா­ன­மான ஒரு­வ­ரான பிரெஞ்சு – லெப­னா­னிய வர்த்­தகர் ஸியாட் தக்­கீதீன் (75) மர­ண­ம­டைந்து 2 நாட்­களின் பின்னர் மேற்­படி நீதி­மன்றத் தீர்ப்பு வெளி­யா­கி­யுள்­ளது.

2006 மற்றும் 2007 ஆம் ஆண்­டு­களில் 50 மில்­லியன் யூரோ வரை­யான பணத்தை கடா­பி­யி­ட­மி­ருந்து, அப்­போ­தைய பிரெஞ்சு ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரி­களின் பிர­தா­னிக்கு விநி­யோ­கிப்­ப­தற்கு தான் உத­வி­ய­தாக பல தட­வைகள் ஸியாட் தக்­கீதீன் கூறி­யி­ருந்தார்.

பின்னர் தனது கூற்­று­களை வாபஸ் பெற்­றுக்­கொண்டார் தக்­கீதின். இதையடுத்து சாட்­சிக்கு அழுத்தம் ஏற்­ப­டுத்­தினர் என்ற சந்­தே­கத்தில் நிகோலஸ் சார்­கோஸி மற்றும் புரூணி சார்­கோ­ஸிக்கு எதி­ராக மற்­றொரு விசா­ர­ணையை பிரெஞ்சு அதி­கா­ரிகள் ஆரம்­பித்­தி­ருந்­தனர்.

பிர­சா­ரத்­துக்­காக சார்­கோஸி தனது தந்­தை­யான முவம்மர் கடா­பி­யி­ட­மி­ருந்து மில்­லியன் கணக்­கான யூரோக்களை பெற்றார் என கடா­பியின் மகன் சயீப் அல் இஸ்லாம் 2011 ஆம் ஆண்டில் தெரி­வித்­தி­ருந்தார். அப்­போது சார்­கோஸி ஜனா­தி­ப­தி­யாக பத­வி­ வ­கித்தார். 2013 ஆம் ஆண்டில் இது தொடர்­பாக பிரெஞ்சு அதி­கா­ரிகள் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தி­ருந்­தனர்.

முந்­தைய தண்­ட­னைகள்

நிகோலஸ் சார்­கோஸி நீதி­மன்­றத்தால் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்­டமை இது முதல் தட­வை­யல்ல.

தான் சம்­பந்­தப்­பட்ட வழக்கு ஒன்றின் தக­வல்­களை நீதி­பதி ஒரு­வ­ரி­ட­மி­ருந்து சட்­ட­வி­ரோ­த­மாக பெறு­வ­தற்கு சார்­கோஸி முயன்றார் என்ற குற்­றச்­சாட்டு தொடர்­பான வழக்கில் அவ­ருக்கு 2021 ஆம் ஆண்டு 3 வருட சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது. அதில் 2 வரு­ட­காலம் ஒத்­தி­ வைக்­கப்­பட்ட சிறைத்­தண்­ட­னை­யாக இருந்­தது. அத்­தீர்ப்­புக்கு எதி­ராக அவர் மேன்­மு­றை­யீடு செய்தார்.

2012 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்தல் பிர­சார நிதி துஷ்­பி­ர­யோகம் தொடர்­பான வழக்கில் சார்­கோ­ஸிக்கு ஒரு வருட சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்டு, பின்னர் அது 6 மாத சிறைத்­தண்­ட­னை­யா­கவும், 6 மாத காலம் ஒத்­தி­ வைக்­கப்­பட்ட சிறைத்­தண்­ட­னை­யா­கவும் மாற்­றப்­பட்­டது. இதற்கு எதி­ரான சார்­கோ­ஸியின் மேன்­மு­றை­யீடு வழக்கு நிலு­வையில் உள்­ளது.

அதேவேளை 2021 ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீட்டு மனுவை விசாரித்த அந்நாட்டு உச்சநீதிமன்றம் அத்தீர்ப்பை கடந்த வருட இறுதியில் உறுதிப்படுத்தியது. பிரெஞ்சு சட்டத்தின்படி 2 வருடங்களுக்கு குறைந்த சிறைத்தண்டனை பெற்றவர்கள் சிறைக்கு செல்லாமல், நடமாட்டத்தை கண்காணிப்பதற்கான சாதனத்தை அணிந்த நிலையில் வீட்டுக்காவலில் இருப்பதற்கு அனுமதிக்கப்படுவர்.

அதன்படி, அவர் நடமாட்டத்தை கண்காணிப்பதற்கான சாதனத்தை அணிந்த நிலையில் வீட்டுக்காவலில் இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டார். இச்சாதனம் அணிவிக்கப்பட்ட பிரான்ஸின் முதல் முன்னாள் ஜனாதிபதியானார் சார்கோஸி. 3 மாதங்களின் பின்னர் அச்சாதனம் இவ்வருட முற்பகுதியில் அகற்றப்பட்டது

இந்நிலையிலேயே தற்போது கடாபியுடனான ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் அவருக்கு 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறை செல்கிறார்.

அரசியல்வாதிகளுக்கு எதிரான இலஞ்சம் மற்றும் கிரிமினல் குற்றச்சாட்டுகளைக் கையாள்வதற்கு பிரான்ஸின் நீண்டகால போராட்டத்தில் இவ்வழக்கின் இத்தீர்ப்பு ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.

ஆர்.சேது­ராமன்

Share.
Leave A Reply

Exit mobile version