உலக சுற்றுலா தினத்திற்கு இணையாக மத்திய மாகாண சுற்றுலா தின நிகழ்வுகள், மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபயகோன் தலைமையில் கண்டியில் இடம்பெற்றது.
மேற்படி வைபவம் கண்டி, தொடம்வல பாலத்திற்கு அருகில், மகாவலி ஆற்றங்கரையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை சுற்றுலா அமைச்சு, மற்றும் மத்திய மாகாண வர்த்தக, வாணிப திணைக்களம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
நீருடன் தொடர்புடைய பாரம்பரிய நீரியல் விளையாட்டுக்கள் பல ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தன. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலர் இதில் பங்கெடுத்தனர்.
தற்போதைய அரசாங்கம் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதில் பெரும் பங்களிப்பைச் செய்து வருவதாகவும், மத்திய மாகாணத்தில் இதுபோன்ற திட்டங்களைத் தொடங்குவது மகிழ்ச்சியளிக்கும் விஷயம் என்றும் மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபயகோன் தனது உரையில் இங்கு குறிப்பிட்டார்.